Rapid FactCheck: ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டு டைம் ஊடகம் அட்டைப் படம் வெளியிட்டதா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

‘’ஹிட்லருடன் ஒப்பிட்டு மோடி புகைப்படத்தைச் சித்தரித்து டைம் ஊடகம் அட்டைப் படம் வெளியிட்டது,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பலர் உண்மை போல குறிப்பிட்டு, ஷேர் செய்வதைக் கண்டோம்.

Twitter Claim Link I Archived Link 

உண்மை அறிவோம்:
மோடி பற்றி ஏற்கனவே சில அட்டைப் படங்களை டைம் ஊடகம் வெளியிட்டிருக்கிறது. அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

TIME Link

ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அட்டைப் படத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று எதுவும் சமீபத்தில் டைம் ஊடகம் வெளியிடவில்லை.

இதுபோன்ற சித்தரிக்கப்பட்ட அட்டைப் படங்களை டைம் ஊடகத்தின் லோகோ பயன்படுத்தி தயாரிப்பது எப்படி என்று ட்விட்டர் பயனாளர் ஒருவர் ஏற்கனவே விரிவாக பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவையும் கீழே இணைத்துள்ளோம்.

இந்த வகையில் ஹிட்லர் புகைப்படத்தையும், மோடி புகைப்படத்தையும் இணைத்து மேற்கண்ட வகையில் சிலர் போலியான அட்டைப் படத்தை, டைம் ஊடகத்தின் பெயரில் தயாரித்து பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

நமது ஆங்கிலப் பிரிவினர் ஏற்கனவே இதுதொடர்பாக விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த கட்டுரையை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Fact Crescendo English Link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:Rapid FactCheck: ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டு டைம் ஊடகம் அட்டைப் படம் வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

Leave a Reply