FactCheck: ஜெராக்ஸ் கடைகளில் பொதுமக்களின் அடையாள விவரங்கள் திருடப்படுகிறதா?

சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’ஜெராக்ஸ் கடைகளில் பொதுமக்களின் அடையாள விவரங்கள் திருடப்படுகின்றன,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
ஜெராக்ஸ் கடைகளில் நாம், ஸ்கேன் செய்யவோ அல்லது ஜெராக்ஸ் எடுக்கவோ தரக்கூடிய ஆவணங்களை நமக்குத் தெரியாமல், நகல் எடுத்து, காசுக்காக சமூக விரோதிகளுக்கு விற்கிறார்கள் எனும் அர்த்தத்தில் மேற்கண்ட வீடியோ பரப்பப்படுகிறது.

ஆனால், இது உண்மையாகவே ஆவணங்களை திருடும்போது ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ அல்ல; திட்டமிட்டு தொழில்நுட்ப கலைஞர்களால் எடுக்கப்பட்ட தொழில்முறையிலான விழிப்புணர்வு வீடியோ இதுவாகும்.

இதனை ஹம்சா நந்தினி என்ற தொழில்முறை நடிகை அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதிலேயே தெளிவாக, இது பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் திட்டமிட்டு எடுக்கப்பட்ட விழிப்புணர்வு வீடியோ; உண்மையான காட்சிகள் அல்ல, என்று அவர் குறிப்பிட்டும் உள்ளார்.

எனினும், இந்த கேப்ஷனை சரியாக படிக்காமல், இது உண்மையான வீடியோ, மோசடி நடக்கும்போது ரகசிய முறையில் படம்பிடிக்கப்பட்டது என்று கூறி பலரும் சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்து வருகின்றனர்.

முழு வீடியோவை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

எனவே, விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட வீடியோவை பலரும் உண்மையான வீடியோ போல ஷேர் செய்து வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ஜெராக்ஸ் கடைகளில் பொதுமக்களின் அடையாள விவரங்கள் திருடப்படுகிறதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

Leave a Reply