
‘‘நாட்டின் நலனுக்காக தங்கம் வாங்க வேண்டாம்’’, என்று 1967ம் ஆண்டு இந்திரா காந்தி வலியுறுத்தியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’1967 இல் அப்பொழுது பிரதமர் இந்திரா காந்தி அவர்களே நாட்டின் நலனுக்காக தங்கம் வாங்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link 1 l Claim Link 2 l Archived Link
இதனுடன், The Hindu நாளிதழ் வெளியிட்ட தலையங்கம் ஒன்றின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது The Hindu பெயரில் பகிரப்படும் வதந்தி, என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக, The Hindu ஆசிரியர் குழுவில் கேட்டபோது, ‘’எங்களது பெயரில் வேண்டுமென்றே இவ்வாறு போலியான செய்தி பரப்புகிறார்கள். நாங்கள் ஏற்கனவே இதுபற்றி எங்களது சமூக வலைதள பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளோம்,’’ என்றனர்.
மேலும், நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, ஜூன் 6, 1967 அன்று வெளியான தி இந்து முகப்பு படம் வேறொன்றாகும். அதனை The Hindu Associate Editor & Political Editor Nistula Hebbar அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நாளிதழ் புகைப்படம், உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


