
‘விஜய் மற்றும் திரிஷா ஒன்றாக சிஎஸ்கே கிரிக்கெட் மேட்ச் பார்த்தனர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ பதவியேற்ற ஐந்தே நாட்களில் 24 கொலைகள்
விஜய் தன் தோழியோடு சிஎஸ்கே கிரிக்கெட் மேட்ச் பார்த்து மகிழும் தரணும்
மேட்ச் பாக்க போனதுல தப்பு இல்ல
தமிழ்நாட்டு சட்டஒழுங்கையும் பாருங்க விஜய்
அரசியல் சினிமா ஷூட்டிங் முடிச்சிட்டு வீட்டுக்கு போறது இல்ல 24 மணி நேரம் களத்தில் இருப்பது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது AI முறையில் தயாரிக்கப்பட்ட வீடியோ, என்று தெரியவந்தது.

இந்த வீடியோவில் DE (Dileep’s Edit) என்ற வாட்டர்மார்க் இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், தகவல் தேடியபோது dileeps_edit என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே வீடியோ முதலில் பகிரப்பட்டுள்ளதைக் கண்டோம். இதற்கு, ‘’Cheering for CSK 💛💛💛Vijay Thalapathy and Trisha in the stadium Made using @oiioii_ai ,’’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதன்மூலமாக, oiioii_ai என்ற animated AI agent உதவியுடன் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது, என்று நமக்கு தெளிவாகிறது.
கூடுதல் ஆதாரம் இதோ…
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ AI மூலமாக தயாரிக்கப்பட்டது; உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


