யூ டியூப் சேனல்கள் PRESS, MEDIA என்று சொல்லக்கூடாது: மத்திய அரசு உத்தரவு உண்மையா?

சமூக வலைதளம்

‘’யூ டியூப் சேனல்கள் பிரஸ், மீடியா என சொல்லக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

மேற்கண்ட செய்தியை நமது நண்பர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய கோரினார். இதையேற்று, ஃபேஸ்புக் மற்றும் கூகுளில் யாரேனும் செய்தி வெளியிட்டுள்ளனரா என தகவல் தேடினோம். அப்போது, கடந்த 2 நாட்களாக, இந்த செய்தி வைரலாகப் பரவியதை காண முடிந்தது. 

இதில் மிகவும் குறிப்பிட வேண்டிய விசயம், மேற்கண்ட தகவலை நியூஸ் ஜே, கலைஞர் டிவி போன்ற முன்னணி ஊடகங்களும் பகிர்ந்திருந்த விவரம் காண நேரிட்டது. 

Facebook Link Archived Link 
Facebook Link Archived Link Kalaignar NewsArchived Link 

இதே செய்தியை தினமலர் போன்ற ஊடகங்கள் பகிர்ந்துவிட்டு, பிறகு டெலிட் செய்துவிட்டன. ஆனால், கூகுள் சர்வரில் இன்னமும் இந்த பதிவுகள் அழியவில்லை.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என தெரிந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பர துறை (DIPR) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர்கள், ‘’சமீபத்தில்தான் யூ டியூப் சேனல்களை டிஜிட்டல் மீடியா என்கிற கேட்டகிரியில் பிரித்து, அங்கீகரிக்க தீர்மானித்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், யூ டியூப் சேனல்களையும் நாங்கள் மற்ற தொலைக்காட்சி ஊடகங்களைப் போலவே நடத்த வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படும் செய்தியில் நம்பகத்தன்மை இல்லை. மேற்கண்ட வாட்ஸ்ஆப் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, தற்போது மத்திய செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இணையமைச்சர் பதவியில் கர்னல் ராஜ்வர்த்தன் சிங் கிடையாது,’’ எனக் குறிப்பிட்டனர்.

இதன்பேரில் நாமும் தகவல் தேடினோம். அப்போது, 2014 முதல் 2018 மே 24ம் தேதி வரை செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக ராஜ்யவர்த்தன் சிங் இருந்துள்ளார். அதற்குப் பின் 2019 மே மாதம் வரை தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பதவியை தனி பொறுப்பாக வகித்தவர், மக்களவை தேர்தலுக்குப் பின் அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக தற்போது பிரகாஷ் ஜவடேகர் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக செயல்படுகிறார்.

இதனை உறுதி செய்யும் வகையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஆய்வு செய்தோம். அதிலும் பிரகாஷ் ஜவடேகர் பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கண்ட செய்தி போல எதுவும் அறிவிக்கை வெளியானதா என விவரம் தேடினோம். அப்போது இப்படி எந்த அறிவிக்கையும் இடம்பெறவில்லை என தெளிவானது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) யூ டியூப் சேனல்களை விடவும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்றவற்றில்தான் அதிக வதந்திகள் பரவுகின்றன.
2) உண்மையை சரிபார்க்காமல் முன்னணி ஊடகங்கள் கூட வாட்ஸ்ஆப் தகவலை அப்படியே பரபரப்பு செய்தியாக வெளியிடும் வழக்கம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.
3) ராஜ்யவர்த்தன் சிங் செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறையின் இணை அமைச்சர் பதவியில் இருந்து 2018ம் ஆண்டே விலகிவிட்டார்.
4) சமீபத்தில்தான் டிஜிட்டல் மீடியா என்ற பெயரில் யூ டியூப் சேனல்களுக்கு அங்கீகாரம் தர மத்திய அரசு தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:யூ டியூப் சேனல்கள் PRESS, MEDIA என்று சொல்லக்கூடாது: மத்திய அரசு உத்தரவு உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False