பேருந்தில் விஜயகாந்த் படம் வைத்ததா மலேசிய அரசு?- ஃபேஸ்புக் வதந்தி

Coronavirus அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

விஜயகாந்தின் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு, பஸ்ஸின் பின்புறம் அவரது புகைப்படத்தை வைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

சமூக ஊடகத்தில் ஒருவர் வெளியிட்ட புகைப்பட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “கேப்டன் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு அவரை பாராட்டும் விதமாக அவர்கள் நாட்டு பேருந்தில் படம் வரைந்து, அந்த நாட்டு மக்கள் அவரை பற்றித் தெரிந்துகொள்ளும் விதமாக இதை செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Shiva Sankar‎என்பவர் புரட்சிகலைஞரின் புரட்சிபடை என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 மே 9ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தன்னுடைய கல்லூரி வளாகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விஜயகாந்த் அறிவித்தார்.

அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் விஜயகாந்தின் மனிதநேயம் என்று புகழ்ந்து பல பதிவுகள் வெளியாகின. யாரோ ஒருவர் போட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளதால் உண்மையான பதிவு கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது மலேசிய பேருந்தில் கேப்டன் படம் என்று பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் படம் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.

Facebook LinkArchived Link

மலேசியா, அரசு பேருந்து, விஜயகாந்த் ஆகிய கீவார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடியபோது எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்தை பல ஊடகங்கள் பயன்படுத்தி வந்திருப்பதை காண முடிந்தது. சிலர் விஜயகாந்த் படம் உள்ள பகுதியில் தங்கள் புகைப்படம், தங்களுக்கு விருப்பமானவர்கள் புகைப்படத்தை வைத்து வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. 

midwesttruckadvertising.comArchived Link 1
Facebook LinkArchived Link 2

நீண்ட தேடலுக்குப் பிறகு ஷட்டர்ஸ்டாக் என்ற புகைப்படங்கள் விற்பனை தளம் ஒன்றில் இந்த பஸ்ஸின் புகைப்படம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. ஸ்டாக் இமேஜை எடுத்து நடிகர் விஜயகாந்த் படத்தை அரசு பஸ்ஸில் மலேசிய அரசு விளம்பரம் செய்துள்ளது என்று பகிர்ந்திருப்பது உறுதியானது. 

shutterstock.comArchived Link

இதன் அடிப்படையில், விஜயகாந்தின் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு அவரது படத்தை மலேசிய பஸ்ஸில் வெளியிட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பேருந்தில் விஜயகாந்த் படம் வைத்ததா மலேசிய அரசு?- ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •