பாஜக ஆதரவாக மீம்ஸ் போட ரூ.500 தருகிறேன் என்று மாரிதாஸ் சொன்னாரா?

அரசியல் சமூக ஊடகம்

‘’பாஜக ஆதரவாக மீம்ஸ் போட ரூ.500 தருகிறேன்,’’ என்று மாரிதாஸ் சொன்னதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Inigo Pious என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’ இந்த 500 ஓவாவ விடுங்க டெல்லி வரைக்கும் செல்வாக்கு இருக்கு…..கொலையே கூட செய்யலாம்…. இதான் பாயிண்டு….. அஞ்சுகொலை கேப்மாரிதாஸ் வாழ்க,’’ என்று எழுதியுள்ளார்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட பதிவின் கீழேயே, ஒருசிலர் கமெண்ட் பகிர்ந்துள்ளனர். அதில், இது போலியான தகவல் எனக் கூறி சிலர் குறிப்பிட்டுள்ளனர். இதைப் பார்த்ததும், இந்த தகவலின் மீது சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, மாரிதாஸ் தொடர்பாக, இதேபோல வேறு யாரேனும் தகவல் பகிர்ந்துள்ளார்களா என விவரம் தேடினோம். அப்போது மேலும் சிலர் வெளியிட்ட தகவல் ஆதாரம் கிடைத்தது. 

நிறைய பேர் இதனை உண்மை போல பகிர்ந்த நிலையில், இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட மாரிதாஸ் ஃபேஸ்புக் பக்கம் சென்று தகவல் தேடினோம். அப்போது அவர் தன்மீது அரசியல் காரணங்களுக்காக, இப்படி போலியான ஃபோட்டோஷாப் தகவலை சிலர் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். அவர் அளித்துள்ள விளக்கம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Facebook Link I Archived Link

இதுதவிர, இவர்கள் பகிரும் ஃபேஸ்புக் பதிவில் மாரிதாஸ் (Maridhas) என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையான மாரிதாஸ் ஃபேஸ்புக் ஐடியின் பெயர் எம் என்ற இனிஷியலுடன் அதாவது, ‘Maridhas M‘ என உள்ளது. இதை வைத்துப் பார்த்தால், இது போலியான தகவல்தான் என தெரியவருகிறது. 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில், சம்பந்தப்பட்ட நபரே அதனை போலியாகச் சித்தரிக்கப்பட்ட தகவல் என மறுத்துள்ளதை காண முடிகிறது. எனவே, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவுகள் அனைத்தும் தவறானவை என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பாஜக ஆதரவாக மீம்ஸ் போட ரூ.500 தருகிறேன் என்று மாரிதாஸ் சொன்னாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •