தங்க நகைகள் அணிந்து நடமாடும் மு.க.ஸ்டாலின் பேரன்: வைரல் புகைப்படத்தால் சர்ச்சை

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’மு.க.ஸ்டாலினின் பேரன், சபரீசனின் மகன் கழுத்தில் நகைகளுடன் நடமாடுகிறான்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தை காண நேர்ந்தது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\stalin 2.png

Facebook Link I Archived Link

Rajasekarjothi Rajasekarjothi என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இளைஞர் ஒருவர் கழுத்து, கைகள் முழுக்க தங்க நகைகள் அணிந்தபடி போஸ் தரும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ பாட்டன் தமிழ்நாட்டை கொள்ளையடித்த பணத்தை பேரன் கழுத்தில் நகை கடை வைத்திருக்கிறான்,’’ என்று எழுதியுள்ளனர். அத்துடன் இது ஏற்கனவே வேறு ஒருவர் வெளியிட்ட பதிவின் ஸ்கீரின்ஷாட் ஆகும். ஸ்டாலினின் பேரன் சபரீசன் மகன் என்று யாரோ எழுதி பகிர்ந்ததை இந்த நபர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்திருக்கிறார். ஆனாலும், இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் போல வேறு யாரேனும் ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்ந்துள்ளனரா என்ற சந்தேகத்தில் தகவல் தேடினோம். அப்போது பலரும் இதனை ஸ்டாலின் பேரன் என்று கூறி பகிர்ந்து வரும் விவரம் கிடைத்தது.

C:\Users\parthiban\Desktop\stalin 3.png

இதையடுத்து, மேற்கண்ட புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் என்ற சந்தேகத்தில் கூகுள் சென்று ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இந்த நபர் புனேவைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஹர்ஷ்வர்தன் என்றும் உண்மை தெரியவந்தது.

C:\Users\parthiban\Desktop\stalin 4.png

ஹர்ஷவர்தன் பாந்தர்கார் என்ற நபருக்கு உடல் முழுக்க நகைகள் அணிந்தபடி, பாடிகார்டுகள் சூழ நடைபோடுவது பிடித்தமான விசயம் போல. புனேவின் தங்க நகை இளைஞர் என்று அழைக்கப்படும் இவர் தைரியமாக தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்பட பல சமூக வலைதளங்களில் பதிவேற்றிவருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் ஐடியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\stalin 5.png

இதுதவிர, ஹர்ஷ்வர்தன் பற்றிய சுவாரசியமான தகவல்கள் அடங்கிய வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி மேற்கண்ட புகைப்படத்தில் இருக்கும் நபர் ஸ்டாலினின் பேரன் அல்ல; அவர் புனேவைச் சேர்ந்த ஹர்ஷ்வர்தன் என்பவர் ஆவார் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தங்க நகைகள் அணிந்து நடமாடும் மு.க.ஸ்டாலின் பேரன்: வைரல் புகைப்படத்தால் சர்ச்சை

Fact Check By: Pankaj Iyer 

Result: False