தனது காதலனின் மேனேஜரையும் விட்டு வைக்காத நயன்தாரா: சர்ச்சை கிளப்பும் செய்தி

சமூக ஊடகம் சினிமா

‘’விக்னேஷ் சிவனை மட்டுமா?- காதலனின் மேனேஜரையும் விட்டு வைக்காத நயன்தாரா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Asianet Tamil LinkArchived Link 2

இது ஏசியாநெட் தமிழ் நியூஸ் இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியின் லிங்க் ஆகும். அந்த செய்தியின் தலைப்பில் ‘’விக்னேஷ் சிவனை மட்டுமா?.. காதலனின் மேனேஜரையும் விட்டு வைக்காத நயன்தாரா…!,’’ எனக் கூறியுள்ளனர். இதனால், இந்த செய்தியை பலரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா உள்ளிட்டோரை காதலித்து பிரிந்த நிலையில், தற்போது சினிமா இயக்குனர் விக்னேஷ் சிவனை தீவிரமாகக் காதலிக்கிறார். விரைவில், இவர்கள் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில்கூட விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடினார் நயன்தாரா. இதுபற்றி India Today வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இவ்வாறு நயன்தாரா, விக்னேஷ் சிவன் பெயரை சொன்னாலே, அவர்களின் காதல் கதைதான் சினிமாத்துறையில் உள்ளவர்கள், ரசிகர்களுக்கு நினைவிற்கு வரும் அளவுக்கு அவர்கள் நெருங்கி பழகி வருகின்றனர்.

இந்நிலையில்தான் மேற்கண்ட ஏசியாநெட் தமிழ் செய்தி வெளியாகியுள்ளது. செய்தியின் தலைப்பில், விக்னேஷ் சிவனை தொடர்ந்து, அவரது மேனேஜரையும் நயன்தாரா ‘எதோ’ செய்துவிட்டார் என்பது போல வாசகர்களிடம் ஒருவித ஹைப் ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், செய்தியின் உள்ளே, நயன்தாரா புதியதாக நடிக்கும் நெற்றிக்கண் என்ற படத்தின் தயாரிப்பாளராக அவரது காதலன் விக்னேஷ் சிவனும், அந்த படத்தின் இணை தயாரிப்பாளராக விக்னேஷ் சிவனின் மேனேஜர் மயில்வாகனனும் செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒருவரை சினிமா தயாரிப்பாளராக தரம் உயர்த்தி, நயன்தாரா உதவியுள்ளார் எனக் கூறுவதற்கு, அவரை தப்பான செயல் செய்ததுபோல விரசமான தலைப்பிட்டு, இந்த செய்தியை எழுதியுள்ளனர்.

பொதுவாகவே, சினிமா நடிகைகள் பற்றி பலவித கிசுகிசு பரவிவரும் சூழலில், இப்படியான ஒரு தலைப்பிட்ட செய்தி, நயன்தாரா பற்றி தவறான அர்த்தம் கற்பிப்பதாக உள்ளது. பரபரப்பிற்காக செய்தி வெளியிடுபவர்கள் அதன் தலைப்பை சற்று கவனித்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இவ்வாறு கில்மா லெவலில் தலைப்பிட்டு செய்தி வெளியிடுவது சம்பந்தப்பட்டவர்களின் தரத்தை குறைப்பதோடு, வாசகர்களை தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:தனது காதலனின் மேனேஜரையும் விட்டு வைக்காத நயன்தாரா: சர்ச்சை கிளப்பும் செய்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •