குஜராத் குடிசைப்பகுதி என்று பகிரப்படும் படம் உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

குஜராத் குடிசைப்பகுதி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு டிரம்ப் வந்ததையொட்டி சாலைகள் அழகுபடுத்தப்பட்ட படத்தையும் குடிசைப் பகுதி படத்தையும் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “திரைக்கு பின்னால் இருப்பதுதான் குஜராத்தின் புதிய இந்தியா” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Tindivanam Sathik என்பவர் 2020 பிப்ரவரி 19 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டிரம்ப் வருகையையொட்டி சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரவின. மிக நீளமான சுவற்றில் டிரம்ப், மோடி படங்கள் வரையப்படும் காட்சியைக் காட்டிவிட்டு, மற்றொரு படத்தில் குடிசை பகுதியை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில் திரைக்கு பின்னால் இருப்பதுதான் குஜராத்தின் புதிய இந்தியா என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் குடிசைப் பகுதியானது குஜராத்தில் உள்ளது என்றும் அதை சுவர் எழுப்பி மறைத்துள்ளது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த குடிசை படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்கள், அச்சு, ஆன்லைன் ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது தெரிந்தது. 

Search link

salemnews.com என்ற இணையதளம் இந்த படத்தை 2015ம் ஆண்டு வெளியிட்டிருந்தது. அதில் இது மும்பையில் உள்ள குடிசைப்பகுதி என்று குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து தேடியபோது 2008ம் ஆண்டு இந்த படத்தை lebbeuswoods.wordpress.com என்ற இணையதளம் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதிலும், மும்பையில் உள்ள குடிசைப் பகுதி என்று குறிப்பிட்டிருந்தனர். 

salemnews.comArchived Link 1
lebbeuswoods.wordpress.comArchived Link 2

தொடர்ந்து தேடியபோது இந்த படத்தை இணையதளம் ஒன்று விற்பனைக்கு வைத்திருப்பதை காண முடிந்தது. அதில் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஆனால், மும்பை குடிசைப்பகுதியின் சுகாதாரமற்ற நிலை என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம், இந்த புகைப்படம் குஜராத்தில் எடுக்கப்பட்டது இல்லை, பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், குஜராத்தின் புதிய இந்தியா என்று பகிரப்படும் இந்த படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

agefotostock.comArchived Link

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:குஜராத் குடிசைப்பகுதி என்று பகிரப்படும் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •