‘’வாடகை காரில் மோடியை வரவேற்ற வாடிகன் போப் ஆண்டவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார்.

இதன்பேரில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை போல பகிர்வதைக் கண்டோம்.

FB Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
இந்திய பிரதமர் மோடி ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, இத்தாலி சென்றுள்ளார். அந்த மாநாடு முடிந்த பிறகு, அப்படியே வாடிகன், இங்கிலாந்து போன்ற இடங்களுக்கும் அவர் செல்கிறார்.

TOI Link

பயணத்தின் ஒருபகுதியாக, வாடிகன் சென்ற பிரதமர் மோடி, அங்கு போப் பிரான்சிஸை நேரில் சந்தித்துப் பேசினார்.

இதன்போது, அவரை வாடகை காரில் அழைத்து வந்து, போப் பிரான்சிஸ் அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. ஆனால், அது உண்மையான புகைப்படம் அல்ல.

இதுபற்றி ANI வெளியிட்ட உண்மையான புகைப்படத்தை கீழே இணைத்துள்ளோம்.

ANI Tweet 1 I ANI Tweet 2

எனவே, பிரதமர் மோடி சென்ற காரின் புகைப்படத்தை எடிட் செய்து, வாடகை கார் போன்ற தோற்றத்தை உருவாக்கி, இவ்வாறு வதந்தி பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:வாடகை காரில் மோடியை வரவேற்ற வாடிகன்?- போலியான புகைப்படத்தால் சர்ச்சை…

Fact Check By: Pankaj Iyer

Result: Altered