ராகுல் காந்தி கொலம்பிய நாட்டு பெண்ணை திருமணம் செய்துள்ளார்: ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

அரசியல் சமூக ஊடகம்

ராகுல் காந்தி கொலம்பிய பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார் என்று ஃபேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இது உண்மையா என்ற கோணத்தில் ஆய்வு செய்தோம்.

வதந்தியின் விவரம்:

…விக்கிலீக்ஸ் செய்தியின் படி, ராகுல்காந்தி கொலம்பிய நாட்டு பெண்ணை திருமணம் செய்துள்ளார். மகன் NIYEK வயது 14 , மகள் MAINK வயது 10 , லண்டனில் உள்ளனர்…

Archived Link

மே 6ம் தேதி Guru Krishna என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ராகுல் காந்தி பற்றி பலவித வதந்திகள் பரவுவது வாடிக்கையாக உள்ளது. அவர் ஏற்கனவே திருமணமானவர், அவரது மனைவி இத்தாலியில் உள்ளார், அவர் லண்டனைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார், அவரது குடும்பம் கொலம்பியாவில் உள்ளது என, இத்தகைய வதந்தி புதுப்புது அவதாரங்களை எடுத்து வருகிறது.

இதன்படி, கூகுளில் ஒருமுறை தகவல் உறுதி செய்வதற்காக தேடிப் பார்த்தோம். அப்போது, ராகுல் காந்தியின் திருமண வாழ்க்கை பற்றி பரவும் பல வதந்திகளும் கிடைத்தன.

C:\Users\parthiban\Desktop\rahul gandhi 2.png

இதுதொடர்பதாக, ஏற்கனவே TheQuint உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த விவரமும் நமக்குக் கிடைத்தது. இதன்படி, Nathalia Ramos என்ற ஸ்பெயின் நாட்டு நடிகை 2017, செப்டம்பர் 14ம் தேதியன்று, தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில், ராகுல் காந்தியை சந்தித்ததாகக் கூறி, புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படம், அப்போதே பல்வேறு தரப்பிலும் வைரலாகப் பகிரப்பட்டது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூட இந்த புகைப்படம் தொடர்பாக, நதாலியாவுக்கு நேரடியாக ட்விட்டரில் கமெண்ட் பதிவிட்டிருந்தார்.

C:\Users\parthiban\Desktop\rahul gandhi 3.png

இந்த புகைப்படத்தை வைத்துத்தான் பலரும் ராகுல் காந்தி கொலம்பிய பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு, குழந்தைகள் உள்ளனர். ராகுல் காந்தியின் மனைவி ஒரு இத்தாலிய பெண், ராகுல் காந்தியின் குடும்பம் லண்டனில் தலைமறைவாக உள்ளது, கொலம்பிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனின் மகளை ராகுல் மணந்துகொண்டார், என்றெல்லாம் ஆளாளுக்கு வதந்தி பரப்பி வருகிறார்கள்.

இதன்படியே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவிலும் தவறான தகவலை வெளியிட்டுள்ளனர் என உறுதி செய்யப்படுகிறது. இதுதொடர்பாக, TheQuint வெளியிட்ட செய்தியை முழுதாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய ஆதாரமற்ற, தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி சம்பந்தப்பட்ட நபர் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:ராகுல் காந்தி கொலம்பிய நாட்டு பெண்ணை திருமணம் செய்துள்ளார்: ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

Fact Check By: Parthiban S 

Result: False