புரூஸ் லீ டேபிள் டென்னிஸ் விளையாடும் வீடியோ உண்மையா?

சமூக வலைதளம் ஹாலிவுட்

‘’புரூஸ் லீ டேபிள் டென்னிஸ் விளையாடும் அரிய வீடியோ காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Video Link

Magesh Manali

என்பவர் இந்த வீடியோ பதிவை அக்டோபர் 21, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், புரூஸ் லீ போலவே தோற்றமளிக்கும் ஒருவர், நுன்ச்சக் சுழற்றியபடி அதிவேகமாக டேபிள் டென்னிஸ் விளையாடுகிறார். இதனை 1970ல் புரூஸ் லீ உயிரோடு இருக்கும்போது எடுத்த வீடியோ எனக் கூறி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். குறிப்பாக, Lakhsmankumar Raju என்பவர் வெளியிட்ட பதிவுக்கு சுமார் 6000 ஷேர்கள் கிடைத்திருந்ததை காண முடிந்தது. 

உண்மை அறிவோம்:
புரூஸ் லீ என்ற பெயரை சொன்னாலே கண்டிப்பாக யாராக இருந்தாலும் ஒருமுறை தலைநிமிர்ந்து பார்ப்பார்கள், அதைப் போலவே அந்த பெயரை கேட்பவர்களுக்கும் ஒருவித சிலிர்ப்பு ஏற்படும். தனது அதி வேக மற்றும் கடுமையான தற்காப்புக் கலை அறிவை ஹாலிவுட் சினிமா படங்களில் சண்டைக்காட்சிகள் மூலம் வெளிப்படுத்தியதால் இன்றளவும் உலகம் முழுக்க போற்றப்படுபவர் புரூஸ் லீ.

அத்தகைய புரூஸ் லீ நுன்ச்சக் (nunchucks) எனப்படும் தற்காப்புக் கலையை செய்வதிலும் அகாய சூரர்தான். உதாரணமாக, அவர் நடித்த சில திரைப்பட காட்சிகளின் வீடியோவை கீழே இணைத்துள்ளோம். 

புரூஸ் லீயின் வீரம் மீது யாருக்கும் சந்தேகமில்லை என்றாலும், அவர் நுன்ச்சக் சுழற்றியபடி டேபிள் டென்னிஸ் எதுவும் விளையாடினாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில் கூகுளில் தகவல் ஆதாரம் தேடியபோது, இது தவறான தகவல் என்ற விவரம் தெரியவந்தது. 

இதன்படி, மேற்கண்ட வீடியோ கடந்த 2008ம் ஆண்டு நோகியா ஃபோன் நிறுவனம், சீன வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, அறிமுகம் செய்த லிமிடெட் எடிஷன் புரூஸ் லீ என்ற செல்ஃபோனை விளம்பரப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பரப் படமாகும். இதன் முடிவாக வரும் இணையதள முகவரியை பார்த்தாலே புரியும். 

இந்த வீடியோவில் இருப்பவர் புரூஸ் லீ இல்லை, அவரைப் போலவே தோற்றமளிக்கும் ஒருவரை நடிக்கவைத்து பிறகு கிராஃபிக்ஸ் முறையில் அதனை டேபிள் டென்னிஸ் விளையாடுவதைப் போல சித்தரித்துள்ளனர்.

இதுதவிர இவ்வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஏற்கனவே பலரும் விரிவாக ஆய்வு செய்து, இதில் இருப்பவர் புரூஸ் லீ இல்லை என்று தெளிவுபடுத்திவிட்டனர். 

Butterflyonline.com Link Snopes.com LinkTheQuint News Link 

எனவே, நோக்கியா நிறுவனம் எடுத்த டிஜிட்டல் விளம்பர படத்தை உண்மை என நம்பி தவறான தகவலை ஃபேஸ்புக் பதிவர்கள் வெளியிட்டு வருவதாக, தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த வீடியோ பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:புரூஸ் லீ டேபிள் டென்னிஸ் விளையாடும் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •