சீமான் மற்றும் மகிந்த ராஜபக்ச ஒரே காரில் சென்றனரா?

Altered அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘‘ஒரே காரில் சென்ற சீமான் மற்றும் மகிந்த ராஜபக்ச’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம், என்று தெரியவந்தது. 

இதன்படி, கடந்த 2014ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச மகன் Namal Rajapaksa அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இதேபோன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஆனால், அதில் சீமான் இல்லை. 

கூடுதல் ஆதாரத்திற்காக, நமது Fact Crescendo Srilanka குழுவின் உதவியுடன் Namal Rajapaksa தரப்பை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். அவர், ‘’எங்களது பழைய புகைப்படத்தை எடிட் செய்து, வேண்டுமென்றே இவ்வாறு வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தார். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம், உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: சீமான் மற்றும் மகிந்த ராஜபக்ச ஒரே காரில் சென்றனரா?

Fact Check By: Pankaj Iyer

Result: Altered

Leave a Reply