
‘‘இரு சக்கர வாகன ஓட்டிகள் சைடு ஸ்டாண்ட் எடுத்துவிட்டு ஓட்டுங்கள்’’, என்று விஜய் உத்தரவிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக சைடு ஸ்டாண்டை எடுத்துவிட்டுதான் ஓட்ட வேண்டும்- முதல்வர் விஜய் உத்தரவு.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது Polimer News பெயரில் பரவும் போலியான நியூஸ் கார்டு, என்று தெரியவந்தது.

மேற்கண்ட நியூஸ் கார்டில், 17.06.2025 என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவிக்கு வந்தது 10.05.2026 அன்று…
இதன்மூலமாக, ஓராண்டுக்கு முந்தைய தேதியிட்டு, விஜய் பெயரில் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள், என்று நமக்கு தெளிவாகிறது.
கூடுதல் ஆதாரத்திற்காக, Polimer News ஊடகத்தின் ஆசிரியர் குழுவிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook PageI Twitter Page I Google News ChannelI Instagram


