துபாயில் விவேகானந்தர் தெரு உள்ளதா?- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி!

சமூகம் சர்வதேசம்

துபாயில் விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு என்ற முகவாி உள்ளதாக ஒரு அறிவிப்பு பலகை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Dubai 2.png
Facebook LinkArchived Link

சாலை பெயர் பலகை முன்பு ஒருவர் நிற்பது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. அந்த பெயர் பலகையில், ‘விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு, (துபாய் கிராஸ்)’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனுடன் அரபியிலும் எழுதப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், ‘கடைசியில் கண்டுபிடிச்சுடோம்ல👍 விவேகானந்தர் தெரு. துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து, துபாய்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை சுபா ஆனந்தி என்பவர் 2018 ஜனவரி 24ம் தேதி வெளியிட்டுள்ளார். இப்போதும் இந்த பதிவு ஷேர் செய்யப்பட்டுள்ளது. பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் இந்த படம் மற்றும் நிலைத்தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வெற்றிக்கொடி கட்டு படத்தின் நடிகர் பார்த்திபன், வடிவேலு காமெடி காட்சி மிகவும் பிரபலம். அதில், ‘துபாயில் எங்கே வேலை பார்த்த, அட்ரெஸ் சொல்லு’ என்று பார்த்திபனிடம் வடிவேலு கேட்பார். அதற்கு பார்த்திபன், ‘விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து, துபாய்’ என்று சொல்வார். காமெடிக்காக வைக்கப்பட்ட காட்சி உண்மையானது என்ற வகையில் பதிவிட்டுள்ளனர்.

ஏதோ ஒருவர் விளையாட்டுக்காக பதிவிட்டுள்ளாரா அல்லது சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்படுகிறதா என்று தேடினோம். அப்போது பலரும் இந்த பதிவை ஷேர் செய்து வருவது தெரிந்தது. எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

Dubai 3.png

படத்தைப் பார்க்கையில் போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டது போல உள்ளது. ஆங்கில எழுத்து தனியாக வைக்கப்பட்டதுபோல உள்ளது. துபாயில் உள்ள சாலை பெயர் பலகைகள் எப்படி இருக்கும் என்று தேடிப் பார்த்தோம். துபாயில் உள்ள சாலை பெயர் பலகைக்கும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் படத்தில் இருந்த ஆங்கில எழுத்துக்கும் வித்தியாசம் இருந்தது. மேலும், சாலை எண் அழிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. 

Dubai 4.png

செல்போன் இமேஜ் டிரான்ஸ்லேட்டர் translatez ஆப்பை பயன்படுத்தி படத்தில் உள்ள அரபு வார்த்தை என்ன என்று தேடினோம். அப்போது அது பீச் கிளப், பாம் ஜுமேரா கிழக்கு மற்றும் மேற்கு  என்று காட்டியது.

Dubai 5.png

துபாயில் விவேகானந்தர் தெரு என்று எங்காவது உள்ளதா என்று கூகுள் மேப்பில் தேடினோம். ஆனால், அது போல ஒரு சாலை இருப்பதாகவே கூகுள் மேப் காட்டவில்லை. யோகா மையம் ஒன்று இருந்ததாகவும் அதுவும் தற்போது கூடப்பட்டுவிட்டது என்றே காட்டியது. கூகுள் தேடலில் தேடியபோது வடிவேலு – பார்த்திபன் காமெடி தொடர்பான படங்கள், அதை வைத்து வெளியான மீம்ஸ் மட்டுமே கிடைத்தன.

Dubai 6.png
Search Link 1Search Link 2

இந்த தகவல் அடிப்படையில், துபாயில் விவேகானந்தர் சாலை உள்ளது என்று ஃபேஸ்புக்கில் பகிரப்படும் படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:துபாயில் விவேகானந்தர் தெரு உள்ளதா?- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •