‘‘தமிழக வெற்றி கழகத்தை நிறுத்தப் போகிறேன்’’ என்று விஜய் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

தந்த டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’கட்சியை நிருத்தபோகும் விஜய். கட்சியை நிருத்திவிட்டு மீண்டும் படத்துக்கும் செல்ல போகிறேன் என்றுவாக்கு குடுத்தார் நடிகர் விஜய். விஜய் எடுத்த அதிரடி முடிவு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மக்களவைத் தேர்தல் 2024 நடைபெற உள்ளதால், சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் பற்றி வித விதமான வதந்திகள் பகிரப்படுகின்றன.

அந்த வரிசையில் நடிகர் விஜய் புதியதாக தொடங்கியுள்ள அரசியல் கட்சி பற்றியும் நாள்தோறும் புதுப்புது வதந்திகள் பரவுவதைக் காண முடிகிறது.

இவை பற்றி நாமும் அவ்வப்போது ஃபேக்ட்செக் வெளியிட்டு வருகிறோம்.

Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2

இதேபோன்று பகிரப்படும் மற்றொரு வதந்திதான் தற்போது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள நியூஸ் கார்டும்…

இதனை தந்தி டிவி வெளியிடவில்லை. நாம் இதுபற்றி அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். அவர், ‘’இது நாங்கள் வெளியிட்ட நியூஸ் கார்டு இல்லை. எங்களது பெயரில் பரவும் போலியான செய்தி,’’ என்று தெரிவித்தார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தேடினோம். ஆனால், எந்த செய்தியும் இவ்வாறு காணக் கிடைக்கவில்லை.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, தந்தி டிவி பெயரில் பகிரப்படும் போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘தமிழக வெற்றி கழகத்தை நிறுத்தப் போகிறேன்’ என்று விஜய் அறிவித்தாரா?

Written By: Fact Crescendo Team

Result: False