FactCheck: மாணவர்கள் காதல் செய்யுங்கள் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’மாணவர்கள் தினமும் ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,’’ என்று ஒரு செய்தி தந்தி டிவி லோகோவுடன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன் பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்வதை கண்டோம்.

Facebook Claim Link 1 I Archived Link 1

Facebook Claim Link 2 I Archived Link 2

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தி உண்மையானது என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அத்துடன் இது தந்தி டிவியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசு (திமுக) மீது அவதூறு பரப்பும் வகையிலும் இருப்பதால், தந்தி டிவியே முன்வந்து, இதுபற்றி மறுப்பு வெளியிட்டுள்ளது. தந்தி டிவி வெளியிட்ட ட்வீட்டை ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.

Archived Link

அதேசமயம், தமிழ்நாட்டில் பள்ளிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் பற்றி நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அடிக்கடி தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரியை தொடர்பான பாலியல் குற்றங்கள் பற்றி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளதால், அவற்றை விமர்சிக்கும் உள்நோக்கத்துடன் மேற்கண்ட போலிச் செய்தியை சிலர் தயாரித்து பகிர்ந்திருப்பதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:மாணவர்கள் காதல் செய்யுங்கள் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False