FactCheck: இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டதா?

ஆன்மீகம் உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டுபிடிப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று பார்த்தால், இல்லை என்பதே பதிலாகும். ஆம், இது வியட்நாம் நாட்டில் உள்ள Cát Tiên archaeological site எனற இடம். அங்கே கடந்த 4 முதல் 9ம் நூற்றாண்டு வரை இந்தியாவில் இருந்து குடியேறிய மக்களால் நிறைய சிவ லிங்கம் கொண்ட கோயில்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

அந்த இடங்களில் ஒன்றுதான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் உள்ள கோயிலும்.

கடந்த 1985ம் ஆண்டில் நடைபெற்ற அகழாய்வில் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

Southeastasianarchaeology Link I en.vietnamplus.vn link I Vietnamtourism.gov.vn link

எனவே, வியட்நாம் நாட்டில், 4 முதல் 9ம் நூற்றாண்டுக்கு இடையிலான காலத்தில் நிறுவப்பட்ட சிவ லிங்கத்தின் புகைப்படத்தை எடுத்து, இது இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 7500 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் என்று வதந்தி பரப்பியுள்ளனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False