‘’சிறு வயதிலேயே ரஜினி முன் பேசிய அண்ணாமலை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சிறு வயதிலேயே இப்படி வளர்ந்து வருவார் என்று ‌சன் டிவிக்கு தெரிய வந்தது இருப்பதால் தான். அவரை கண்டு திமுக நடுங்குகிறது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று நாம் விவரம் தேடினோம். அப்போது, இந்த வீடியோவில், OnlySuperstar.com என்ற watermark இடம்பெற்றுள்ளதைக் கண்டோம்.

இதனை வைத்து தகவல் தேடியபோது, இது கடந்த 1999ம் ஆண்டு படையப்பா படத்தின் வெற்றி விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரியவந்தது. ஆனால், இந்த வீடியோவில் பேசும் நபரின் பெயர் ‘மணிகண்டன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Only Superstar Blog Link l Rajini Special Blogspot Link

ஆனால், மேற்கண்ட Blog-ல் இணைக்கப்பட்டிருந்த யூ டியுப் லிங்க் பயன்பாட்டில் இல்லை. தொடர்ந்து தேடியபோது, இதே வீடியோவை மற்றொரு யூ டியுப் பக்கத்தில் வெளியிட்டிருந்ததைக் கண்டோம்.

முழு வீடியோ லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

இதன் அடிப்படையில் தொடர்ந்து தகவல் தேடியபோது, இந்த வீடியோவில் பேசிய நபர் மணிகண்டன் என்றும், தற்போது பெருமாள் மணி என்ற பெயரில் ஊடகத் துறையில் பணிபுரிகிறார் என்றும் தெரியவந்தது.

இதுதொடர்பாக அவரே, 1999ம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் வெளிவந்த செய்தியை குறிப்பிட்டு, ட்விட்டரில் பதிவு வெளியிட்டும் உள்ளார். அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

இறுதியாக, அண்ணாமலையின் வயது என்ன என்று விவரம் தேடினோம். அவர் கடந்த 1984ம் ஆண்டு பிறந்தவர் என்று தெரியவந்தது. இதன்படி பார்த்தால், படையப்பா பட விழாவில் பேசும் நபரோ கல்லூரி மாணவ பருவத்தில் உள்ளார். ஆனால், அதே 1999ம் ஆண்டு அண்ணாமலைக்கு 15 வயது கூட நிரம்பவில்லை.

எனவே, வேறொரு நபர் பேசும் வீடியோவை எடுத்து, அண்ணாமலையின் பேச்சுத் திறமை என்று கூறி, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகின்றனர், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:சிறு வயதிலேயே மேடையில் பேசி அசத்திய அண்ணாமலை என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False