FactCheck: குஜராத்தில் 70,000 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் மீது சோலார் பேனல்கள் நிறுவப்பட்டதா?

இந்தியா சமூக ஊடகம் தமிழ்நாடு

குஜராத் மாநிலத்தில் 70,000 கிமீ நீளத்திற்கு கால்வாய் மீது சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தி தயாரிப்பு மையம் குஜராத் மாநிலத்தில் நிறுவப்பட்டு வருகிறது. 726 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த சூரிய ஒளி மின் சக்தி தயாரிப்பு மையம் கட்டமைப்படுகிறது.

The Print Link

ஆனால், இது கட்ச் வளைகுடாவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுவப்படுவதாகும். நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில், நீர்க் கால்வாய் மீது 70,000 கிமீ நீளத்திற்கு இத்தகைய சூரிய ஒளி மின் சக்தி தயாரிப்பு மையம் நிறுவப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே, அப்படி எதுவும் கால்வாய் மீது சோலார் பேனல்கள் நிறுவப்பட்டதா, என தகவல் தேடினோம்.

அப்போது, குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றின் கால்வாய்களில் சுமார் 532 கிமீ நீளத்திற்கு சோலார் பேனல்களை நிறுவும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருவதாக, விவரம் கிடைத்தது. 2012ம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

Gujarat Canal Solar Power Project I BBC Link I ploxpop.com link  
இதற்கடுத்தப்படியாக, பஞ்சாப் மாநில அரசு, குஜராத்தைப் பின்பற்றி சுமார் 10,000 கிமீ நீளம் உள்ள நீர்க்கால்வாய்கள் அனைத்திலும் படிப்படியாக சோலார் பேனல்களை அமைக்க தீர்மானித்துள்ளது.

Punjab Energy Development Agency Link I Saur Energy Link I Goodnewsnetwork link

எனவே, நடைமுறையில் உள்ள திட்டப் பணிகளை சற்று மிகைப்படுத்தி, குஜராத் மாநிலத்தைப் பாராட்டும் வகையில் மேற்கண்ட வகையில் வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:குஜராத்தில் 70,000 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் மீது சோலார் பேனல்கள் நிறுவப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False