1990 முதல் 2021 வரை பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு ரூ.1,55,000 நிதி உதவி வழங்கப்படுகிறதா?
‘’1990 முதல் 2021 வரை பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு ரூ.1,55,000 நிதி உதவியை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் வழங்குகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது இந்த தகவல், இந்திய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருவதைக் கண்டோம்.
இதில் நாம் சென்னையை சேர்ந்த ஃபேஸ்புக் பதிவர் ஒருவர் வெளியிட்டிருந்த பதிவை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
கடந்த 1990-2021 வரையான கால கட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ரூ.1,55,000 நிதி உதவி வழங்குகிறது என்றும், இதனைப் பெற Bondiatran.blogspot.com என்ற இணையதள முகவரியை கிளிக் செய்க என்றும் இந்த தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், அந்த இணையதள முகவரியில் கூறப்பட்டுள்ள தகவல் நம்பும்படியாக இல்லை. மேலும், இந்த நிதி உதவி மத்திய அரசு ஊழியர்களுக்கா அல்லது மாநில அரசு ஊழியர்களுக்கா, யாருக்கு அறிவிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தப்படவே இல்லை. அதேபோல, மத்திய அரசு அறிவித்ததா அல்லது மாநில அரசின் தொழிலாளர் துறை அமைச்சகம் அறிவித்ததா என்றும் குறிப்பிடவில்லை. பொதுவாக, ஆங்கிலத்தில் இந்த தகவலை உருவாக்கி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதன்பேரில், மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்திடம் பேசி உறுதிப்படுத்திய பிறகு, இது ஒரு வதந்தி என்று, மத்திய அரசுக்குச் சொந்தமான PIB FactCheck தெளிவுபடுத்தியுள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:1990 முதல் 2021 வரை பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு ரூ.1,55,000 நிதி உதவி வழங்கப்படுகிறதா?
Fact Check By: Pankaj IyerResult: False