
‘‘கடந்த 5 வருடங்களில் சிறந்த எதிர்க் கட்சி நாம் தமிழர்,’’ என்று IBC தமிழ் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ IBC தமிழ் நடத்திய கருத்துக்கனிப்பு – பிப்ரவரி 2026. தமிழ்நாட்டில் கடந்த 5 வருடங்களில் மக்கள் பிரச்சனையில் மக்கள் கூட நின்ற எதிர் கட்சி எது? எந்த கட்சிக்கு வாக்களிக்க போகிறார்கள்? நாதக 73%, அதிமுக 20% தவெக 4.5%, இதர கட்சிகள் 2.5%,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
IBC தமிழ் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது IBC தமிழ் பெயரில் பரவும் போலியான செய்தி, என்று தெரியவந்தது.

இதன்படி, எழுத்துப் பிழைகளுடன் IBC Tamil பெயரில் வேண்டுமென்றே போலியான செய்தியை பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


