
‘’நடிகர் ராம்கி இறந்துவிட்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ளனர். கமெண்ட் பகுதியில் பலர் இது நடிகர் ராம்கியா அல்லது வேறு யாரேனும் ஒருவரா என்று கேட்டு, கண்டித்துள்ளதையும் காண முடிகிறது.

குறிப்பிட்ட இணையதள செய்தியின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இந்த செய்தியின் தலைப்பு, முகப்பு உள்ளிட்ட பகுதிகளில், நடிகர் ராம்கி திடீர் மரணம் என்று குறிப்பிட்டு, மு.க.ஸ்டாலின், நடிகர் அர்ஜூன், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதைப் போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
இதனை பார்க்கும்போது, பிரபல நடிகர் ராம்கி மறைந்துவிட்டார் என்றே அர்த்தம் தோன்றுகிறது. ஆனால், இதன் விவரம் தெரியாமல் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

உண்மை அறிவோம்:
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ராம்கி என்றால் உடனே நினைவுக்கு வருபவர் சின்னப்பூவே மெல்லப்பேசு படம் மூலமாக அறிமுகமான நடிகர் ராம்கிதான். கூகுளில் சென்று ராம்கி என்று பதிவிட்டால், உடனடியாக, இவர் தொடர்பான தேடல்களே நமக்குக் கிடைக்கிறது.

ஆனால், குறிப்பிட்ட செய்தியின் உள்ளே இறந்தவர் ஒரு டிவி சீரியல் நடிகர் என்றும், அவரது பெயர் ராதாகிருஷ்ணன் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தியின் தலைப்பில், சீரியல் நடிகர் ராம்கி அல்லது சீரியல் நடிகர் ராமகிருஷ்ணன் என்றோ, நாடக நடிகர் ராம்கி என்றோ கூட குறிப்பிட்டிருந்தால், இந்த குழப்பம் வந்திருக்காது.
ஆனால், வேண்டுமென்றே வாசகர்களை குழப்பி, அதிக லைக் வாங்கும் நோக்கில், உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக, அர்த்தம் தோன்றும் வகையில் குறிப்பிட்டு, தவறான தகவலை பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:நடிகர் ராம்கி இறந்துவிட்டார் என்று மொட்டையாகச் செய்தி வெளியிட்டு வாசகர்களை குழப்பிய இணையதளம்!
Fact Check By: Pankaj IyerResult: Misleading
