FactCheck: முஸ்லிம் ப்ரோ ஆப் அமெரிக்க ராணுவத்திற்கு பயனாளர்களின் விவரத்தை விற்றதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’முஸ்லிம் ப்ரோ ஆப் அமெரிக்க ராணுவத்திற்கு பயனாளர்களின் ரகசியங்களை விற்றது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இந்த செய்தியை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) நமக்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார்.

‘’பயனாளர்களின் விவரத்தை அமெரிக்க ராணுவத்திற்கு முஸ்லிம் ப்ரோ ஆப் விற்றுவிட்டது,’’ எனும் தலைப்பில் செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியை கட்டிங் எடுத்து, மேற்கண்ட வகையில் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
Motherboard, என்ற ஆன்லைன் ஊடகம், மூன்றாம் தர புரோக்கர்களுக்கு பயனாளர்களின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை வழங்கக்கூடிய ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. அதில், முஸ்லிம் ப்ரோ ஆப் உள்ளிட்ட பல ஆப்கள் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை, பணத்திற்காக வெளியில் விற்பனை செய்வதாகக் குறிப்பிடப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், X mode உள்ளிட்ட டேட்டா பார்ட்னர்களுடன் வைத்துள்ள வர்த்தக தொடர்பை கைவிடுவதாக முஸ்லிம் ப்ரோ அறிவித்திருந்தது.

உலகம் முழுக்க இந்த ஆய்வறிக்கை பரவிய சூழலில், இதுபற்றி முஸ்லிம் ப்ரோ ஆப் ஏற்கனவே கடந்த 2020 நவம்பரில் மறுப்பு ஒன்றையும் தெரிவித்திருந்தது.

Aljazeera link

எனவே, பழைய செய்தியை உண்மை தெரியாமல் மீண்டும் புதியதுபோல பகிர்ந்து, சமூக வலைதள பயனாளர்களை குழப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:முஸ்லிம் ப்ரோ ஆப் அமெரிக்க ராணுவத்திற்கு பயனாளர்களின் விவரத்தை விற்றதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Missing Context