‘பெற்ற தாயை மதிக்காமல் சென்ற விஜய்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’பெற்ற தாயை மதிக்காமல் சென்ற விஜய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ஏதோ சும்மா கடந்து போகிற ஆள் இல்லடா... அது பெத்த அம்மா 🤦’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து […]
‘’பெற்ற தாயை மதிக்காமல் சென்ற விஜய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஏதோ சும்மா கடந்து போகிற ஆள் இல்லடா...
அது பெத்த அம்மா 🤦’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகர் விஜய் சமீபத்தில் அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார். இதற்கான நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் தாய் ஷோபா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பின் நடிகர் விஜய், அவரது தாய் ஷோபாவை மதிக்காமல் சென்றுவிட்டார் என்று கூறி சமூக வலைதளங்களிலும், முன்னணி ஊடகங்களிலும் ஏராளமான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த செய்திகள் அனைத்தும் பொய். ஆம், நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவை மதிக்காமல் சென்றதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் என்பது அந்த நிகழ்ச்சியின் முழு வீடியோவை பார்த்தவர்களுக்கு, நன்கு தெரியும்.
தனது கையை பிடித்து, தாய் ஷோபா அழைத்ததும் உடனடியாக திரும்பும் விஜய் ‘புறப்படலாம்’ என்று சொல்லி, கை, தலையை ஆட்டுவதும், அதற்கு ஷோபா பதில் அளிப்பதும் பல ஊடகங்களில் காட்டப்படவில்லை.
முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
முழு காட்சியையும் காட்டாமல், விஜயின் கையை பிடித்து அவரது தாய் இழுக்கும் காட்சியை மட்டும் எடிட் செய்து, அது மட்டுமே உண்மை போன்று பலரும் அரசியல் உள்நோக்கத்துடன் ஷேர் செய்து, வருகின்றனர்.
உண்மையான வீடியோவையும், எடிட் செய்யப்பட்ட காட்சியையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் நம்பகமானது இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:‘பெற்ற தாயை மதிக்காமல் சென்ற விஜய்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Fact Crescendo TeamResult: False