‘’ யோகி ஜீ யின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை,’’ என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் ட்வீட் வெளியிட்டதாக, தகவல் ஒன்று பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (9049044263) வழியே அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, இந்த ட்வீட்டை பலரும் உண்மை என நம்பி, ஷேர் செய்வதையும் கமெண்ட் பகுதியில் விமர்சிப்பதையும் கண்டோம்.

Tweet Claim Link l Archived Link

இந்த ட்வீட்டின் கமெண்ட் பகுதியில் பகிரப்பட்டுள்ள சில பதிவுகளையும் கீழே இணைத்துள்ளோம்.

உண்மை அறிவோம்:

உண்மையில், குறிப்பிட்ட ட்விட்டர் ஐடி அண்ணாமலை ஆதரவாளர்களால் நிர்வகிக்கப்படுவது இல்லை. ஆம். இந்த ஐடி, அண்ணாமலை ஆதரவாளர்களை கேலி, கிண்டல் செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதாகும். இதன் யூசர் நேம், பயோ பார்க்கும்போதே, இது ஒரு கேலி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஐடி என்பதைக் காண முடிகிறது.

Twitter ID Link

எனவே, கேலி, கிண்டலுக்காக உருவாக்கப்பட்ட ஐடி வெளியிடும் ட்வீட்களை பலரும் உண்மையாகவே அண்ணாமலை ஆதரவாளர்கள் வெளியிட்டதாக நினைத்துக் குழப்பிக் கொள்கின்றனர். அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்தியே மேற்கண்ட ட்வீட் என்று சந்தேகமன்றி உறுதி செய்யப்படுகிறது.


முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:யோகி ஜீயின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் ட்வீட் பகிர்ந்தனரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: Misleading