அக்னிபாத் திட்டத்திற்கு மாற்றாக ஜலபாத் திட்டம் என்று மோடி அறிவித்தாரா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

‘’அக்னிபாத் திட்டத்திற்கு மாற்றாக ஜலபாத் என்ற புதிய திட்டத்தை மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +919049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பலர் இதனை ஷேர் செய்வதைக் கண்டோம்.

Twitter Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் அக்னிபாத் என்ற புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிவித்தது. இதன்படி, ஐரோப்பிய நாடுகளைப் போன்று 17 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள், ராணுவத்தில் பணிபுரிந்த பின், இதர வேலைகளுக்குச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு இந்தியா முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால், சட்டம், ஒழுங்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

DNA Link I TOI Link

இந்த போராட்டங்களை குறிப்பிட்டும், மோடி அரசின் செயல்பாடுகளைக் கேலி செய்தும் மேற்கண்ட வகையில் சிலர் ஜூனியர் விகடன் லோகாவைப் பயன்படுத்தி, ஜலபாத் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர்.

உண்மையில், இப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை. ஜூனியர் விகடன் ஊடகம் இதனை மறுத்துள்ளது. மோடியும் மான் கி பாத் நிகழ்ச்சியில் இப்படி பேசவும் இல்லை.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:அக்னிபாத் திட்டத்திற்கு மாற்றாக ஜலபாத் திட்டம் என்று மோடி அறிவித்தாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Satire

Leave a Reply