
‘‘நாங்குநேரி சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ நாங்குநேரியில் அப்பாவி இருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட இத்தகைய கொலைவெறியாட்டத்தை தடுக்க முடியாத ஸ்டாலினின் திமுக அரசிற்கு ராகுல் காந்தி கண்டனம்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ‘’இது பாலிமர் டிவி பெயரில் பரவும் போலியான நியூஸ் கார்டு,’’ என்று தெரியவந்தது.

இதில் Palimer News என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான சேனல் பெயர் Polimer News.

அடுத்தப்படியாக, இதுபற்றி பாலிமர் டிவி ஆசிரியர் குழு மற்றும் திமுக ஐடி பிரிவு, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தலைமை அலுவலகத்திலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:நாங்குநேரி சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False


