பாஜக கூட்டங்களில் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவேன் என்று குஷ்பு கூறினாரா?

சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’பாஜக கூட்டங்களில் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவேன் என்று கூறிய குஷ்பு,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

FB Claim Link Archived Link

இந்த தகவலை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக, நமக்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். அதன்பேரில், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

இதன்பேரில் மீண்டும் தகவல் தேடியபோது, மேலும் சிலர் புதிய தலைமுறை பெயரில் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டு ஒன்றையும் சேர்த்து பகிர்வதை காண நேரிட்டது. 

FB Claim LinkArchived Link

இரண்டுமே ஒரே தகவல்தான். ஆனால், வெவ்வேறு விதமாக பகிரப்பட்டு வருகின்றன.

உண்மை அறிவோம்:
இதன்படி, மேற்கண்டதைப் போல புதிய தலைமுறை ஊடகம் எங்கேனும் செய்தி வெளியிட்டுள்ளதா என தகவல் தேடினோம். அப்போது, குறிப்பிட்ட நியூஸ் கார்டை ஒத்ததைப் போல, கடந்த அக்டோபர் 13, 2020 அன்று 2 நியூஸ் கார்டுகளை புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டிருந்தது.

Archived Link

இதே போல, புதிய தலைமுறை வெளியிட்டிருந்த 2வது நியூஸ் கார்டையும் கீழே இணைத்துள்ளோம்.

Archived Link

இதில், 2வது நியூஸ் கார்டு நாம் ஆய்வு செய்யும் நியூஸ் கார்டை ஒத்ததாக உள்ளது. அதனை எடுத்தே எடிட் செய்து இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது. உண்மை மற்றும் போலியை ஒப்பீடு செய்து கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

இறுதியாக, புதிய தலைமுறை ஊடகத்தின் டிஜிட்டல் ஹெட் மனோஜிடம் இந்த தகவலை உறுதிப்படுத்தச் சொல்லி கேட்டோம். இதனை பார்வையிட்ட அவர், ‘’வழக்கம்போல, புதிய தலைமுறை பெயரில் பகிரப்படும் மற்றொரு போலி நியூஸ் கார்டுதான் இதுவும்,’’ என்றார்.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இதுபோல தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பாஜக கூட்டங்களில் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவேன் என்று குஷ்பு கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •