FactCheck: ராமதாஸ் மற்றும் அன்புமணியை விமர்சித்து நாராயணன் திருப்பதி ட்வீட் வெளியிட்டாரா?

அரசியல் இந்தியா தமிழ்நாடு

‘’பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணியை விமர்சித்து ட்வீட் வெளியிட்ட நாராயணன் திருப்பதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

இதில், நாராயணன் திருப்பதி பெயரில் பகிரப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த ஸ்கிரின்ஷாட்டில், ‘’ராமதாஸ் மற்றும் அன்புமணி அவர்கள் எப்போது எந்த கட்சிக்கு தாவுவார்கள் என்பது பொட்டிக்கே வெளிச்சம் என்பதை உணர்ந்துகொண்டு பாமகவினர் இப்போது பாஜக தொண்டர்கள் ஆகிவிட்டனர். பாமக பாஜக வெவ்வேறு அல்ல என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்,’’ என்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ட்வீட்டில், நாராயணன் திருப்பதி ஐடியின் பெயர் @Narayananpjb3 என்று உள்ளது. இப்படி எதுவும் ஐடி உள்ளதா, என்று ட்விட்டரில் தகவல் தேடினோம்.

ஆனால், இப்படி ட்விட்டர் ஐடி எதுவம் இல்லை என்று தெரியவந்தது. இந்த பெயரில் இயங்கிய ட்விட்டர் ஐடி ரிப்போர்ட் செய்து, முடக்கப்பட்டுள்ளதாகவும் விவரம் கிடைத்தது.

அதேசமயம், நாராயணன் திருப்பதியின் உண்மையான ஐடி எது என்று தேடினோம். அந்த ஐடியின் பெயர் @Narayanan3 என்று உள்ளது. எனவே, உண்மையான ஐடி எது என்று தெரியாமல் போலி ஐடியில் பகிரப்பட்ட தகவலை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதாக சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

நாராயணன் திருப்பதி பெயரில், ட்விட்டரில் ஏராளமான போலி ஐடி., தொடங்கி, தகவல் பகிர்வதையும், அதனை மற்றவர்கள் உண்மை என நம்பிக்கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். இதுபற்றி நாம் கூட ஏற்கனவே நிறைய உண்மை கண்டறியும் செய்திகளை வெளியிட்டிருக்கிறோம். அந்த வரிசையில் வெளியிடப்பட்ட மற்றொரு போலிச் செய்திதான், மேலே நாம் கண்ட தகவலும்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.  

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ராமதாஸ் மற்றும் அன்புமணியை விமர்சித்து நாராயணன் திருப்பதி ட்வீட் வெளியிட்டாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •