விஜயை பார்க்க சேலம் மாநாட்டிற்கு அணிவகுத்த வாகனங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘விஜயை பார்க்க சேலம் மாநாட்டிற்கு அணிவகுத்த வாகனங்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ நம்ப #ThalapathyVijay அவர்களை பார்ப்பதற்கு சேலம் மாநாட்டிற்கு அணிவகுத்த வாகனங்களின் காணொளி 🔥🔥🔥🔥🔥#ᴛʜᴀʟᴀᴘᴀᴛʜʏᴠɪᴊᴀʏ,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  

Claim Link 1 l Claim Link 2 l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ராஜஸ்தான் மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்றும், இதற்கும் சேலத்தில் நடைபெற்ற தவெக., மாநாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்தது. 

கூகுள் ரிவர்ஸ் தேடல் செய்தபோது, கடந்த ஜனவரி 14 ஆம் தேதி இந்த வீடியோ Nirmal Choaudhary என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்முறையாக பகிரப்பட்டுள்ளது, என தெரியவந்தது. ராஜஸ்தானின் தோரிமன்னா பகுதியில் மேற்கண்ட வீடியோ எடுக்கப்பட்டதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், Nirmal Choaudhary என்பவர் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் ஆவார். 

அடுத்தப்படியாக, தவெக., தலைமை அலுவலகத்தில் கேட்டபோது, ‘’இதுபோன்ற வாகன அணிவகுப்பு எதுவும் நாங்கள் சேலத்தில் நடத்தவில்லை,’’ என்று கூறினர். 

இதன்மூலமாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவுக்கும், தவெக., மாநாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:விஜயை பார்க்க சேலம் மாநாட்டிற்கு அணிவகுத்த வாகனங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply