‘’ மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அறிவிப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாகக் கூறி Brij Bhushan Singh மற்றும் Wrestling Federation of India-க்கு எதிராக Sakhi Malik மற்றும் Bajrang Punia உள்ளிட்ட பலரும் டெல்லியில் தொடர் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சில நாட்கள் முன்பாக, சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா இருவரும் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர் என்று கூறி ஊடகங்களில் செய்தி பகிரப்பட்டது.

Indiatoday link l timesofindia link

ஆனால், இச்செய்தி பரவிய உடனே இதுபற்றி சாக்‌ஷி மாலிக் மறுப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Sakshi Malik Tweet Link l livemint link

ஜூன் 5, 2023 பிற்பகல் 3 மணிக்குள் இதுபற்றி சாக்‌ஷி மாலிக் மறுப்பு வெளியிட்டு, உடனடியாக ஊடகங்களிலும் விளக்கம் வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவோ, ஜூன் 5, 2023 மாலை 6 மணிக்கு மேல்தான் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலமாக, வாசகர்களுக்கு தேவையற்ற குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.

உரிய ஆதாரங்களின் அடிப்படையில், பழைய செய்தியை அப்டேட் எதுவும் செய்யாமல் இன்றளவும் ஷேர் செய்து வருகிறார்கள் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அறிவித்தாரா?

Written By: Fact Crescendo Team

Result: MISLEADING