FACT CHECK: மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என்று பகிரப்படும் சாக்‌ஷி மாலிக் புகைப்படம்!

இந்தியா சமூக ஊடகம் விளையாட்டு

உலக கேடட் ரெஸ்லிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற பிரியா மாலிக் என்று ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் படத்தை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் புகைப்படத்துடன் பதிவு வெளியாகி உள்ளது. நிலைத் தகவலில், “தங்க மங்கைக்கு வாழ்த்துகள். மகளிருக்கான நடைபெற்ற 73 கிலோ எடை கொண்ட உலக கேடட் மல்யுத்த வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்த இந்திய வீராங்கனை பிரியா மாலிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை அன்பு அன்பு என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் கவிதை துளிகள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூலை 27, 2021 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பிரியா மாலிக் தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் சூழலில் பலரும் இதை ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்தது என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். ஆனால், பிரியா மாலிக் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லவில்லை என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், தவற்றைத் திருத்திக் கொண்டு பதிவிட்டது போன்று உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பிரியா மாலிக் என்று கூறி சாக்‌ஷி மாலிக் என்ற மல்யுத்த வீராங்கனையின் புகைப்படத்தைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: timesofindia I Archive 1 I indianexpress.com I Archive 2

படத்தில் இருப்பவர் பிரியா மாலிக் இல்லை, சாக்‌ஷி மாலிக் என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சாக்‌ஷி மாலிக் தொடர்பான பல செய்திகள் கிடைத்தன. சாக்‌ஷி மாலிக் ட்விட்டர் பக்கத்தையும் பார்வையிட்டோம். அதில் இதே போன்ற படத்தை அவர் வெளியிட்டிருந்தார். 

Archive

gettyimages.in இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. அதில் இந்த புகைப்படம் 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றபோது எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் சாக்‌ஷி மாலிக் படத்தை எடுத்து, பிரியா மாலிக் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியானது.

அசல் பதிவைக் காண: gettyimages.in I Archive 1 I Times of IndiaI Archive 2

பிரியா மாலிக் உலக கேடட் ரெஸ்லிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது உண்மைதான். ஆனால், பிரியா மாலிக் படத்துக்கு பதில் சாக்‌ஷி மாலிக் படத்தை வைத்து பகிர்ந்துள்ளனர். இதன் மூலம் உண்மையான தகவலுடன் தவறான படம் வைத்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ரெஸ்லிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிரியா மாலிக் என்று சாக்‌ஷி மாலிக் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பலரும் தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என்று பகிரப்படும் சாக்‌ஷி மாலிக் புகைப்படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •