சி.வி. சண்முகம் பற்றி பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு…

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘‘தூக்கு போட்டு சாகலாமா அல்லது விஷ மருந்து குடித்து சாகலாமா’’, என்று சி.வி. சண்முகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’அடுத்தது என்ன? தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை. தூக்கு போட்டு சாகலாமா அல்லது விஷ மருந்து குடித்து சாகலாமா என்று கூறிய சி.வி. சண்முகத்தால் பரபரப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link  l Archived Link      

Sun News லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது Sun News பெயரில் பகிரப்படும் வதந்தி, என்று தெரியவந்தது. அமைச்சரவை என்ற வார்த்தையில் எழுத்துப் பிழையுடன் எழுதப்பட்டுள்ளது. 

அடுத்தப்படியாக, Sun News வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டில் ‘’ அடுத்தது என்ன? தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை. தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் கட்சி பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கிய நிலையில் அடுத்தக்கட்ட நிலைப்பாடு குறித்து ஆலோசனை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  

Sun News Link 1 l Link 2 l Link 3

கூடுதல் ஆதாரத்திற்காக, Sun News ஆசிரியர் குழுவிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: சி.வி. சண்முகம் பற்றி பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு…

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply