தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லயோலா கல்லூரியில் படித்தபோது தரப்பட்ட ஐடி கார்டு இதுவா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘‘தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லயோலா கல்லூரியில் படித்தபோது தரப்பட்ட ஐடி கார்டு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லயோலா கல்லூரியில் படித்தபோது தரப்பட்ட ஐடி கார்டு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link  l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது AI மூலமாக தயாரிக்கப்பட்ட புகைப்படம், என்று தெரியவந்தது. ஆம், இதில் LOYOLA COLLEGE என்பதற்குப் பதிலாக, LOYOLAL என்று எழுத்துப் பிழையுடன் எழுதப்பட்டுள்ளது. மேலும், விஜய் 1996ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தது போன்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், விஜய் 1992ம் ஆண்டே கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டார்.  

இதன்மூலமாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் AI மூலமாக தயாரிக்கப்பட்டது, என்று தெளிவாகிறது. Undetectable AI, Sight Engine Tool, Wasitai போன்ற AI சரிபார்ப்பு இணையதளங்கள் மூலமாகவும், இது போலியான படம் என்று உறுதிப்படுத்தியுள்ளோம்.  

அடுத்தப்படியாக, தவெக தலைமை அலுவலகத்திலும் இதுபற்றி பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Result Stamp

Title: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லயோலா கல்லூரியில் படித்தபோது தரப்பட்ட ஐடி கார்டு இதுவா?

Written By: Pankaj Iyer

Result: False

Leave a Reply