திமுக 39 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாகச் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் தி.மு.க இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் 39 இடங்களையும் கைப்பற்றும் என்று உள்ளது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு […]

Continue Reading

பாஜக நிர்வாகியின் அநாகரீக செயல் என்று பரவும் ட்வீட் ஸ்கிரீன்ஷாட் உண்மையா?

கோவையில் இளைஞரின் ஆண் உறுப்பைக் கடித்த பாஜக நிர்வாகி கைது என்று புதிய தலைமுறை வெளியிட்டது போன்று ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதியதலைமுறை வெளியிட்டது போன்ற ட்வீட்டை ஃபேஸ்புக்கில் 30 ஜனவரி 2024 அன்று பதிவிட்டுள்ளனர். அதில், “கோவை: மதுபோதையில் இளைஞரின் குஞ்சைக் கடித்துக் காயம் ஏற்படுத்திய பாஜக நிர்வாகி – நடந்தது என்ன?” […]

Continue Reading

பாஜக ஒழிக என்று கோஷமிட்ட தமிழிசை மகன்: 2019ல் எடுத்த வீடியோ தற்போது பரவுவதால் சர்ச்சை… 

‘’ பாஜக ஒழிக என்று கோஷமிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மகன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: சென்னை, திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் ஒரு பேரிடர் என்று தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கூறினாரா?

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின் என்று தி.மு.க செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரும் திமுக மாணவரணித் தலைவருமான ராஜீவ் காந்தி கூறியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க மாணவரணித் தலைவர் இராஜீவ் காந்தி புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்ட செய்தி க்ளிப் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவின் பேரிடர் மோடி… தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின்! வெளுத்து […]

Continue Reading

இந்தி ஆதிக்கம்: திமுக.,வில் இருந்து வெளியேறுகிறேன் என்று செந்தில் குமார் அறிவித்தாரா? 

‘’இந்தி ஆதிக்கம் காரணமாக, திமுக.,வில் இருந்து வெளியேறுகிறேன்,’’ என்று செந்தில் குமார் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: சமீபத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர்கள் […]

Continue Reading

நிர்மலா சீதாராமனை வழிமறித்த தூத்துக்குடி மக்கள் என்று பரவும் செய்தி உண்மையா? 

‘’நிர்மலா சீதாராமனை வழிமறித்த தூத்துக்குடி மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை ஊடகத்தின் லோகோவுடன் உள்ள இதில் ‘’தூத்துக்குடியில் பரபரப்பு. தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற நிர்மலா சீதாராமனை வழிமறித்த மக்கள். நிவாரண நிதி எங்கே என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு,’’ என்று […]

Continue Reading

ஆளுநர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

‘’ ஆளுநர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அரசியல் பேசக்கூடாது,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  கதிர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில் ‘’ அண்ணாமலை காட்டம். ஆளுநர்களும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசினால் பிறகு மாநில பாஜக எதற்கு? செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை காட்டமான கேள்வி,’’ […]

Continue Reading

‘வெள்ள நிவாரண நிதி தர முடியாது’ என்று நயினார் நாகேந்திரன் கூறினாரா?   

‘’தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது,’’ என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பிற்கு […]

Continue Reading

காமசூத்ரா புத்தகம் படித்தாரா அமர் பிரசாத் ரெட்டி?   

‘’பாஜக.,வை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி காமசூத்ரா புத்தகம் படித்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். இதனால், […]

Continue Reading

தமிழ்நாடு மழை வெள்ள சேதம்; உலகத் தமிழர்களிடம் நிதி கேட்டாரா மு.க.ஸ்டாலின்?   

‘’தமிழ்நாடு மழை வெள்ள சேதத்திற்காக, உலகத் தமிழர்களிடம் நிதி கேட்ட மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பாலிமர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில், ‘’ உலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்! – முதலமைச்சர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து […]

Continue Reading

தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சிக்கு தர சொன்னாரா சீமான்?   

‘’ தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சிக்கு தர சொன்ன சீமான்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’ நிவாரணத் தொகை – சீமான் வேண்டுகோள். தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவருடன் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து வண்ண பொடி வெடியை வெடிக்க வைத்த நபர்களுள் ஒருவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மைசூரு பாஜக எம்.பி-யுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேற்று நாடாளுமன்றத்தில் புகுந்து கோலி கொண்டாடிய தம்பியும்… […]

Continue Reading

சென்னை வெள்ளத்தில் சிக்கிய முதலை என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னை மழை வெள்ளத்தின்போது வெளிப்பட்ட முதலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதலை ஒன்றை நாய்கள் கடித்து விரட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1]சென்னையில் மழை தண்ணி எல்லாம் வடிஞ்சு முதலை மட்டும் மாட்டிக்கிச்சு. [2]ரொம்ப சாதுவான முதலியா இருக்கு போல….!!! [3]இத பிடிக்க ஒரு 50 கோடி நிதி ஒதுக்குவோமா…!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் […]

Continue Reading

மிக்ஜாம் புயல் நிவாரண நிதி ரூ.6000 வழங்கக் கூடாது என்று பாஜக வழக்கு தொடர்ந்ததா?   

‘’ மிக்ஜாம் புயல் நிவாரண நிதி ரூ.6000 வழங்கக் கூடாது,’’ என்று பாஜக வழக்கு தொடர்ந்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  News தமிழ் 24*7 லோகோவுடன் உள்ள இதில், ‘’ புயல் வெள்ள நிவாரண நிதி 6000 ரூபாயை நேரடியாக மக்களுக்கு வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாஜக […]

Continue Reading

ஆர்.கே.சுரேஷ் மற்றும் நிர்மலா சீதாராமன் சந்தித்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதா?  

‘’சமீபத்தில் ஆருத்ரா மோசடியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஆர்.கே.சுரேஷ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆருத்ரா தங்கநகை முறைகேடு வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போலீஸ் விசாரணைக்கு ஆஜராக சென்னை வந்துள்ள நடிகர் ஆர் கே சுரேஷ் எப்படி ஒன்றிய நிதி […]

Continue Reading

சென்னை மக்களுக்கு நிவாரணத் தொகை தரக் கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

‘’ சென்னை மக்களுக்கு நிவாரணத் தொகை தரக் கூடாது,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எங்களுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு மோடி எதுக்கு 5000 கோடி தரணும்? நிவாரண நிதி தர முடியாது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் நடுவே அண்ணாமலையின் புகைப்படம் உள்ளதால், […]

Continue Reading

கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களை மிரட்டினாரா அண்ணாமலை?

‘’ கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களை வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை அலுவலகங்களின் வாசலில் பேட்டி எடுக்க தயாராக இருங்கள் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,’’ என்று […]

Continue Reading

‘சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி’ என்று பரவும் வீடியோ உண்மையா?   

‘’சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Archive Link இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சென்னை வெள்ளத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உள்ளே…,’’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: சென்னை […]

Continue Reading

பாதாள சாக்கடையில் குப்பை என்று பரவும் படம் சென்னையில் எடுக்கப்பட்டதா?

பாதாள சாக்கடையில் பிளாஸ்டிக் பாட்டில், குப்பைகளை மக்கள் வீசியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாதாள சாக்கடையில் இருந்து ஏராளமான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் எடுக்கப்பட்டு சாலையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “பொது ஒழுக்கம் கிடையாது! பொது சிந்தனை கிடையாது! குப்பைகளை ரோட்டில் வீசுவதற்கு வெட்கமே கிடையாது! ஆனால் மழை […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பரவும் முதலை புகைப்படம்… சென்னை வெள்ளத்தில் எடுக்கப்பட்டதா?

சென்னை வெள்ள பாதிப்பு சூழலில் தண்ணீரில் முதலை இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ள நீரில் வீட்டுக்கு முன்பு முதலை இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த முதலைக்கு என்ன பேர் வைக்கலாம் மக்களே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பாஜக ஆதரவு ஃபேஸ்புக் பக்கம் ஒன்று 2023 டிசம்பர் 5ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் போலீஸ் – பொது மக்கள் மோதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் போலீசும் பொது மக்களும் மோதிக்கொள்கின்றனர், மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை மக்கள் சிலர் ஒன்று திரண்டு தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எங்க நடந்துச்சு ன்னு தெரியல… #விடியா_திமுகமாடல் அரசு ஆளும் தமிழ்நாடு தான் யாருக்குமே #பாதுகாப்பில்லாத_தமிழ்நாடு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

திமுக.,வில் தலித்துகளுக்கு மரியாதை இல்லை என்று பகிரப்படும் தகவல் உண்மையா? 

‘’ திமுக.,வில் தலித்துகளுக்கு மரியாதை இல்லை’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’திமுக.,வில் தலித்துகளுக்கு ஒரு சதவீதம் கூட மரியாதை இல்லாமல் நடத்துகின்றனர். இதை கண்டும் காணாமல் தொல் திருமாவளவன் ஏன் இவர்களுக்காக சொம்படித்துக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் தனது இனத்தை பணத்திற்காக விற்றுவிட்டாரா’’ என்று எழுதப்பட்டுள்ளது. […]

Continue Reading

சென்னை மழை நீரில் தெர்மாகோல் சவாரி செய்யும் நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னையில் பெய்த கன மழையில் சாலையில் தெர்மாகோல் படகு சவாரி செய்யும் நபர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் ஓடும் மழை வெள்ளத்தில் ஒருவர் ஒய்யாரமாக தெர்மாகோலில் படுத்தபடி படகு சவாரி செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “4000 கோடியில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொண்டு முடிக்கப்பட்டது சென்னை மேயர் […]

Continue Reading

திராவிட_மாடல் சாலை என்று பகிரப்படும் தெலுங்கானா வீடியோவால் சர்ச்சை…

‘’திராவிட_மாடல் சாலை’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ 💥ஓட்டு போட்ட மக்களுக்கு  திமுக ஆட்சியின் பரிசு.💥…       காசுக்கு வாக்கை விற்றால் இந்த நிலைதான் மக்களே. 😢 ஸ்டாலின் தான் வராரு…😂😂😂 #பொம்மை_முதல்வர்  #திராவிட_மாடல் .’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Facebook Claim Link l Archived Link பலரும் […]

Continue Reading

நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக பங்கேற்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக பங்கேற்காது’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’ கையெழுத்திட மாட்டோம் – எடப்பாடி. நீட் தேர்வுக்கு எதிராக திமுக மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் நடத்தும் கையெழுத்து […]

Continue Reading

‘ஓட்டு போட்ட மக்களுக்கு கிடைத்த ஒட்டு ரோடு’ என்று பரவும் புகைப்படம் தமிழ்நாட்டில் எடுத்ததா?

ஓட்டு போட்ட மக்களுக்கு விடியல் அரசு அளித்த ஒட்டு போட்ட பழுதடைந்த தார் சாலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மோசமான தார் சாலையின் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஓட்டு போட்ட மக்களுக்கு ஒட்டு போட்ட ரோடுதான்! அது தாரையும் ஜல்லியையும் ஒட்டி வைக்கும் ரோடுதான்! ஒட்டுவதில் கில்லாடிகள் அவர்கள், விடியல் […]

Continue Reading

‘சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டிய எ.வ.வேலு’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதிக்கு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டிய எ.வ.வேலு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலுவின் புகைப்படம் மற்றும் திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதியின் தேர்தல் பிரசார ரிக்‌ஷாவை ஒருவர் ஒட்டி வரும் புகைப்படத்தையும் சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எ.வ. வேலுவின் பரிணாம வளர்ச்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் […]

Continue Reading

ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயித்த திராவிட மாடல் அரசு என்று பரவும் செய்தி உண்மையா?

தீபாவளியையொட்டி திமுக அரசு ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினத் தந்தி நாளிதழில் வெளியான செய்தியை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு” என்று தலைப்பிட்டு ஒரு செய்தியும், அதே பக்கத்தில் “கணவன் மது குடித்ததால் இளம்பெண் […]

Continue Reading

‘சங்கிகளுக்கு அனுமதி இல்லை’ என்று அடையார் ஆனந்த பவன் உணவகம் கூறியதா?

‘’சங்கிகளுக்கு அனுமதி இல்லை’’ என்று அடையார் ஆனந்த பவன் உணவகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மாட்டுச்சாணம் சாப்பிடுபவர்கள் மாற்றுப் பாதையில் செல்லவும். சங்கிகளுக்கு அனுமதி இல்லை – இப்படிக்கு நிர்வாகம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   A2B Veg Restaurant பெயர் உள்ளதால், பலரும் இதனை உண்மை […]

Continue Reading

தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி சந்தித்தது எப்போது என்று தெரியாமல் பரப்பப்படும் வதந்தி!

தருமபுர ஆதீனத்தை சந்திக்க உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் என்ற முறையில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் வந்தேன் என்று கூறுவது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி ஸ்டாலின் சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பேசிக்கொள்வது போன்று கற்பனையான உரையாடல் எழுதப்பட்டுள்ளது. அதில், (தருமபுரம் ஆதீனம் கேட்பது போல்) “யோவ்…சனாதனப் போராளி நீ எங்கய்யா […]

Continue Reading

மகளிர் உரிமைத் தொகை வாங்கி மது அருந்தும் பெண்கள் என்று பரவும் புகைப்படம் – வீடியோ உண்மையா?

தி.மு.க அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வாங்கி மது அருந்தும் பெண்கள் என்று ஒரு புகைப்படம் மற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நம்முடைய வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்பட பதிவை அனுப்பியிருந்தார். வரிசையாக உட்கார்ந்து பெண்கள் மது அருந்தும் புகைப்படத்துடன் “மகளிர் […]

Continue Reading

காவிரி நீரை தமிழ்நாட்டிற்குத் தரக்கூடாது என்று வானதி சீனிவாசன் கூறினாரா?  

‘’ காவிரி நீரை தமிழ்நாட்டிற்குத் தரக்கூடாது,’’ என்று வானதி சீனிவாசன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கன்னட அமைப்புகள், அரசியல் […]

Continue Reading

தமிழகத்தின் முதல் பெண் மாவட்டச் செயலாளரை நியமித்த கட்சி அ.தி.மு.க-வா?

‘’அதிமுக-வின் திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக எல்.ஜெயசுதா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் மாவட்டச் செயலாளர் இவர்,’’ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: facebook.com I Archive 1 I Archive 2 அதிமுக-வின் திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எல்.ஜெயசுதா புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழக அரசியல் வரலாற்றில் முதல் பெண் […]

Continue Reading

காவிரி விவகாரம்: தமிழ் ஓட்டுநர் தாக்கப்பட்டதாகப் பகிரப்படும் பழைய வீடியோவால் சர்ச்சை…

‘’காவிரி விவகாரத்தில் தமிழ் ஓட்டுநர் தாக்கப்படும் அவலம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Archived Link  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி நடத்தி வரும் திமுக அரசுக்கும், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் […]

Continue Reading

அண்ணாமலைக்குப் பதிலாக வானதி சீனிவாசன் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டாரா?

‘’ அண்ணாமலைக்குப் பதிலாக வானதி சீனிவாசன் பாஜக தலைவராக நியமனம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: சில நாட்கள் முன்பாக, ‘’தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம் – பாஜக தலைவர் […]

Continue Reading

உதயநிதி – ஶ்ரீரெட்டி விவகாரத்தில் ஆலோசனை வழங்கத் தயார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினாரா?

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – நடிகை ஶ்ரீரெட்டி விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கத் தயார் என்று நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை ஶ்ரீரெட்டி ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் மீது பாலியல் புகார் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான பாலியல் புகார் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தத் திட்டம் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் மீது பாலியல் புகார். 1970-களில் பல்வேறு பெண்களிடம் லீலைகளில் ஈடுபட்டது குறித்து விக்கிலீக்ஸ் என்ற செய்தி […]

Continue Reading

‘சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழித்துவிடுமா’ என்று நடிகர் சித்தார்த் கேட்டாரா?

‘’சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழித்துவிடுமா’’, என்று நடிகர் சித்தார்த் கேட்டதாக, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இவற்றை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: நடிகர் சித்தார்த் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் ரீதியான கருத்துகள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், […]

Continue Reading

‘எதுக்குப் புரியாம பேசுற’, என்று மோடியிடம் கேட்டாரா கனிமொழி?

“நீங்கள் என்ன பேசினாலும் புரியாது… எதுக்கு புரியாம பேசுற” என்று பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்த கனிமொழி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive நாடாளுமன்றத்தில் கனிமொழி மற்றும் மோடி பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்தியில் பேச, நீங்கள் என்ன பேசினாலும் புரியாது. எதுக்கு புரியாம பேசுற?” என்று நரேந்திர மோடியைப் பார்த்து கனிமொழி பேசுவது போலவும் வீடியோவில் உள்ளது. […]

Continue Reading

மகளிர் உரிமைத் தொகை வாங்கிய வசதியான நபர் என்று பரவும் வதந்தி!

வசதியான ஒருவருக்கு கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை வாங்கியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 தன்னுடைய வீட்டு வாசலில் கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை ரூ.1000ம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் கோலமிட்டவர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவர்கள் தகுதி வாய்ந்த பெண்களை தேர்வு செய்த லட்சணம் இந்த படத்தில் தெரிகிறது. இந்த […]

Continue Reading

திமுக வழங்கும் ரூ.1000 மாதாந்திர உதவித் தொகையை அதிமுக.,வினர் வாங்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’ திமுக வழங்கும் ரூ.1000 மாதாந்திர உதவித் தொகையை அதிமுக.,வினர் வாங்கக் கூடாது,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் கூடிய இந்த நியூஸ் கார்டில், ‘’ நன்றி விசுவாசம் இல்லாதவர்கள்! அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும், கருணாநிதி பெயரிலான […]

Continue Reading

விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததா?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி செய்தியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை. சிலைகளை […]

Continue Reading

விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததா?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி செய்தியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை. சிலைகளை […]

Continue Reading

890 பள்ளிகளை மூடிவிட்டு 815 மதுக்கடைகளை திறக்கும் திமுக அரசு என்று பரவும் பழைய செய்தி!

890 அரசுப் பள்ளிகளை தமிழ்நாடு அரசு மூட திட்டம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தியை இப்போது தி.மு.க அரசு திட்டமிட்டு வருவது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 “10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகள் மூடப்படும்” மற்றும் “ஊரகப்பகுதிகளில் 815 மதுக்கடைகளை திறக்கலாம் தமிழக அரசுக்கு, […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் மணல் கடத்தல் நடப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றில் வரிசையாக லாரிகள் நிற்கும் புகைப்படத்தை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “சோழ மன்னர்களுக்குப் பிறகு காவிரியை தூர்வாறியது தி.மு.க தான் – துரைமுருகன் – தூர்வாரும் போது எடுத்த புகைப்படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை SelvaKumar […]

Continue Reading

நீட் தேர்வு விவகாரம்: ‘தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’ என்று கி. வீரமணி பேசினாரா? 

நீட் தேர்வு விவகாரத்தில், ‘’தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’’ என்று கி. வீரமணி பேசியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை. நீட் தடை செய்யவில்லை என்றால் அனிதா போன்று தற்கொலை செய்யவும் நான் தயார் என் உயிர் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இயக்கப்படும் உடைந்த பஸ் என்று பரவும் படம் இப்போது எடுக்கப்பட்டதா?

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பஸ்சுக்கு புத்தூர் கட்டு போட்டு, இயக்கப்படுகிறது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உடைந்த அரசு பேருந்தின் பம்பர் கயிறு கட்டி வைக்கப்பட்டிருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சந்திரனுக்கு விக்ரம் லேண்டர் விட்டாலும் நம்ம #பொம்மைமுதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பஸ்க்கு புத்தூர் கட்டு தான் போடுவார் ..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் படிக்கட்டு இல்லாத பஸ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் படிக்கட்டு இல்லாத பஸ் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்டதுதானா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive படிக்கட்டு உடைந்த பஸ்ஸை இரண்டு மாணவர்கள் பார்க்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், “அங்கே இன்னாடா தேடுறே.. குறையில்லா ஆட்சியாம்ல.. அதை தான்டா தேடுறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Giri Baba என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

அண்ணாமலை பாத யாத்திரை ரத்து என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘‘அண்ணாமலை பாத யாத்திரை ரத்து’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தவிர்க்கமுடியாத காரணங்களால் பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை ரத்து – தமிழக பாஜக’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Facebook Claim Link […]

Continue Reading

‘திமுக ஆட்சியில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வழியில்லை’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் கருணாநிதி நினைவாக கடலில் பேனா சிலை அமைக்க முடிகிறது, ஆனால் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வழியில்லை என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தானிய மூட்டை மழை – வெயிலில் சேதம் அடைந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கடலில் எழுதாத பேனா வைக்க காசு இருக்கு , கருணாநிதி பேரில் சதுக்கம் […]

Continue Reading