முதியவரை தாக்கும் தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுநர் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?  

அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu தவறாக வழிநடத்துபவை I Misleading

‘‘முதியவரை தாக்கும் தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுநர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பேருந்து ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் 52 LSS நகரப் பேருந்து… பேருந்து எண் TN30 N 1320 ஓட்டுநராக பணிபுரியும் முரளி கிருஷ்ணன் என்பவர் பயணி ஒருவரை தாக்கிய வீடியோ வைரல்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், அரசுப் பேருந்து ஓட்டுநர் வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது முந்தைய திமுக ஆட்சியில் 2022ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ, என்று தெரியவந்தது. 

இதுபற்றி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (@arasubus) சார்பாக, ஏற்கனவே X வலைதளம் மூலமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2022ம் ஆண்டு இந்த வீடியோவை @Nagaraj41336180 என்பவர், அவரது X வலைதள பக்கத்தில் முதன்முதலாக பதிவிட்டிருந்தார்

இதுதவிர, சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் அப்போதே பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ 2022ம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒன்று, இதற்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: முதியவரை தாக்கும் தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுநர் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer

Result: Misleading

Leave a Reply