பாரதிய ஜனதா கட்சி அலுவலக பகுதிக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்ததாக ஒரு நையாண்டி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "காவல் எச்சாிக்கை! பாரதீய ஜனதா கட்சி அலுவலக பகுதியில் உணவு டெலிவரி செய்பவர்கள் மற்றும் பொது மக்கள் யாரும் அவசியம் இல்லாமல் செல்ல வேண்டாம்! அப்பகுதியில்செல்பவர்களை பிடித்து கட்சியில் சேர்ப்பதும்,MP சீட் தருகிறோம் எனவும் ஆசை வார்த்தை கூறுகிறார்களாம்!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த எக்ஸ் தள பதிவை பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போதே இது போலியானது என்று தெரிகிறது. தமிழ்நாடு காவல்துறை எச்சாிக்கை எல்லாம் நையாண்டியின் உச்சம்.

போலியானது என்று தெரிந்தாலும், புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டது போன்று அவர்கள் நியூஸ் கார்டை பயன்படுத்தி வெளியிட்டிருப்பதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம். இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை ஆசிரியர் குழுவுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பினோம். ‘இது போலியானது’ என்று நம்மிடம் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், சிறிது நேரம் கழித்து "இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை", 'FALSE NEWS" என்று முத்திரை குத்தி வெளியிடப்பட்ட நியூஸ் கார்டை நமக்கு அனுப்பினர்.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

சிறிது நேரம் கழித்து புதிய தலைமுறை இணையதளத்தில் அந்த நியூஸ் கார்டு போலியானது என்று பதிவிடப்பட்டது. இதன் மூலம் பாஜக அலுவலகம் பக்கம் பொது மக்கள் செல்ல வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்ததாகப் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாஜக அலுவலகம் பக்கம் பொது மக்கள் வர வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘பாஜக அலுவலகம் பக்கம் செல்ல வேண்டாம்’ என்று காவல்துறை எச்சரிக்கை வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False