
‘‘ராஜஸ்தானில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 32 பேரையும் வீதியில் இழுத்துச் சென்ற பொது மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ராஜஸ்தானில் இடம்பெற்ற கொடூரம் 13 வயது பெண் பிள்ளையை கடத்தி 32 பேர், 5 நாட்கள் ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! இந்த நிலையில்,குறித்த 32 பேரையும் பிடித்த பொது மக்கள் அவர்களை கயிற்றால் கட்டி,வீதியில் வைத்து தாக்குதல் சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகியுள்ளது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த வேறொரு சம்பவம், என்று தெரியவந்தது.

இதன்படி, ‘’குஜராத் மாநிலம் Patan மாவட்டத்தில் உள்ள Jhiliya கிராமத்தில் கோயில் நன்கொடைகள் தொடர்பாக இரு தரப்பினர் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, கடந்த 2026, மார்ச் 15 அன்று ஒரு பண்ணை வீட்டில் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் வன்முறை தாக்குதல் நடத்தியது. இதில், பலர் காயமடைந்தனர். இந்த குற்ற செயலில் ஈடுபட்ட 18 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இது,’’ என்று தெரிய வருகிறது.

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
Shining India News Link l Aaj Tak Link l India Today Link
இதுதொடர்பாக, Patan A Division Police Station தரப்பிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
அதேசமயம், Rajasthan மாநிலத்தில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வேறு…

News on Air l NDTV India l Crime Tak
இதன்மூலமாக, வேறொரு சம்பவத்தின் வீடியோவை எடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


