அமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்கும் முன் ருத்ர மந்திரம் பாடப்பட்டதா?

அமெரிக்கா சமூக ஊடகம்

‘’அமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்கும் முன்பாக ருத்ர மந்திரம் பாடப்பட்டது,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

24, நவம்பர், 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’அமெரிக்க வெள்ளை மாளிகையில் புதிய அரசு பொறுப்பேற்றதற்கு முன் சிவபெருமானின் ஸ்ரீ ருத்ரம் ஒலிக்கப்பட்டு பின்பு ஆரம்பிக்கிறது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

Screenshot: various FB posts with similar caption

உண்மை அறிவோம்:
அமெரிக்காவில், சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். 

Representative Image: US Election 2020

BBC News Link 

இதையடுத்து, வரும் ஜனவரி 2020, 20ம் தேதியன்று அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கிறார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார். ஆனால், அதற்கு முன்பாகவே, சிலர் ஜோ பைடன் பதவியேற்றுவிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் தகவல் பகிர்கின்றனர்.

Reuters News Link 

TheConversation Link

ஆனால், டிரம்ப் பதவிக்காலம் முடிய இன்னும் சில மாதங்கள் எஞ்சியுள்ளன. ஜனவரி, 2021ல் அவரது பதவிக்காலம், ஜோ பைடன் பதவியேற்றதும் முடிவடைகிறது. அதற்கு முன்பாகவே, ஜோ பைடன் பதவியேற்றுவிட்டார், செனட் சபை பதவியேற்றுவிட்டது, டிரம்ப் வெளியேறிவிட்டார், என்றெல்லாம் கூறி சமூக வலைதளங்களில் தகவல் பகிர்வதைக் காண முடிகிறது. ஆனால், அவற்றில் உண்மையில்லை.

இதுபோலவே, மேற்கண்ட வீடியோ பதிவும், செனட் சபை பதவியேற்கும் முன்பாக, ருத்ர மந்திரம் ஒலிக்கப்பட்டதாகப் பகிரப்படுகிறது. உண்மையில் இது தவறான தகவலாகும்.

இந்த வீடியோ, கடந்த 2014ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் நடந்த மத ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றின்போது எடுக்கப்பட்டதாகும். அதற்கும் தற்போது நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கோ அல்லது செனட் சபைக்கோ எந்த தொடர்பும் இல்லை. இதுபற்றி 2014ம் ஆண்டிலேயே பகிரப்பட்ட ஒரு யூடியுப் வீடியோ லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

இதனை Hindu American Seva Communities என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இவர்கள், ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையில் இத்தகைய மந்திரம் ஜெபிக்கும் நிகழ்வை நடத்தி வருகின்றனர். ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Hindu American Seva Communities PDF Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடந்த 2014ம் ஆண்டில் நடந்த நிகழ்வு ஒன்றின்போது எடுக்கப்பட்ட வீடியோ இதுவாகும். 

2) அத்துடன், தற்போது இன்னும் அமெரிக்க செனட் சபை பதவியேற்கவில்லை.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:அமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்கும் முன் ருத்ர மந்திரம் பாடப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False