ஆதார சோதனை: ஓரல் போலியோ வேக்ஸின் (ஓபிவி) தூய்மை கேடு
சமீபத்தில், இந்தியா முழுவதிலுமுள்ள பெற்றோர்கள் மத்தியில் சில வாட்ஸ்அப் மற்றும் சமூக தல தகவல்கள் பயத்தை உண்டு செய்திருந்தன. இந்த தகவல்கள் பொய்யான விபரங்களை கொண்டு பெற்றோர்கள் மனதில் உள்ள பயத்தை பயன்படுத்தி விளையாடின.
சமூக ஊடகத்தில் வெளியான செய்தி விளக்கம்:
மற்ற தகவல்கள் :
“5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு போலியோ சொட்டுக்கள் கொடுக்க வேண்டாம்”
அல்லது
Dheeraj Gadikota@Dheerajgadikota
.
போலியோ சொட்டுக்களில் சில வைரஸ்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாலும் அதனை தயார் செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பதாலும் நாளை 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு போலியோ சொட்டுக்கள் கொடுக்க வேண்டாம் என்று டிவியில் வெளியான செய்தி தெரிவித்தது
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மற்றும் குழந்தைகளை கொண்டிருப்பவர்களுக்கும் தெரிவிக்கவும். வாய் வழி கொடுக்கப்படும் போலியோ சொட்டு மருந்துகளை கொடுக்க வேண்டாம்.
படிப்பவர்கள் இதே ட்வீட்டை இங்கே பார்க்கலாம்: http://archive.is/hLLUb
இதே போன்ற செய்திகளால், மக்கள் குழப்பமுற்று பயத்திற்கு ஆளானார்கள்: இந்த செய்திகளுக்கு எதிராகவோ அல்லது அதற்கு பதில் அளிக்கவோ ட்விட்டர் தளத்தை பயன்படுத்துபவர்கள் பல்வேறு செய்தி ஆதாரங்களிலிருந்து செய்திகளை பரப்ப ஆரம்பித்தார்கள், அது போன்ற சில செய்திகள் கீழே உள்ளன:
அனு பூ@விற்கு பதிலளிக்கையில்
சமீபத்திய போலியோ வேக்ஸின் சர்ச்சைக்கு பின் இந்தியா “போலியோ ஃப்ரீ”யாக இருக்குமா? https://thewire.in/health/explainer-how-bad-is-the-polio-vaccine-contamination-controversy …
விரிவாளர்: “போலியோ வேக்சின் தூய்மை கேடு” சர்ச்சை எவ்வளவு மோசமானது?
கே. அப்படியானால், #போலியோவினால் பாதிக்கப்படும் அபாயத்திலிருந்து குழந்தைகள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
பதில்: இல்லை, இன்னும் 5 முதல் 6 மாதங்களிலேயே நமக்கு அது பற்றி தெரிய வரும். ஏனென்றால், போலியோ தோன்றுவதற்கு அவ்வளவு காலம் ஆகும். https://thewire.in/health/explainer-how-bad-is-the-polio-vaccine-contamination-controversy …
காலை 10:53 – அக்டோ. 2, 2018
ட்விட்டர் விளம்பரங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் தனி உரிமை
விரிவாளர்: “போலியோ வேக்சின் தூய்மை கேடு” சர்ச்சை எவ்வளவு மோசமானது?
ட்விட்டர் முடிவு
ட்விட்டர் விளம்பரங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் தனி உரிமை
நோய் எதிர்ப்பிறகாக #உத்திரபிரதேசம் #மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவில் பயன்படுத்தப்பட்ட குப்பிகளில் காணப்பட்ட #போலியோ # வைரஸ் கலப்படத்தை தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சரகம் ஒரு விசாரணையை நடத்த உத்திரவிட்டுள்ளது மற்றும் இந்த மூன்று மாநிலங்களில் கூடுதலாக நோய் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உத்திரவிட்டுள்ளது. http://bit.ly/2O3Obuw
ட்விட்டர் விளம்பரங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் தனி உரிமை
டைப் 2 போலியோ வைரஸ் கலப்படம் தொடர்பான ஆய்வை மத்திய அரசு தொடங்கியது.
அனைத்தையும் விட்டு தள்ளவும், இப்போது அந்த வேக்சினில் இருந்த போலியோ வைரஸ் பற்றியே கவலை பட வேண்டியுள்ளது. உண்மையிலேயே. இதற்கு காரணமானவர்கள் யாரோஅவர்களே உண்மையான தீவிரவாதிகள் மற்றும் அவர்களை தூக்கில் போட வேண்டும். #போலியோ #வைரஸ்# லீக்ட்? ப்ளேடி ஹெல்
@ஃபையேத்சௌசா: பல விஷயங்கள் தவறாக போய் கொண்டிருப்பதால் ஆரோக்கிய பராமரிப்பை ப்ரைம்டைமில் ஆராய்வோம். ஆரோக்கிய பராமரிப்பே நமது மனதில் முதலில் இருக்க வேண்டும்! #போலியோ
இரவு 9:06 மணி – அக்டோ 3, 2018
உண்மையை அறிய நாங்கள் நடத்திய சோதனை
இந்த பிரச்சினை தொடர்பாக ஃபாக்ட்க்ரெஸன்டோ குழு உண்மையை அறியும் சோதனை நடத்தியது. நாங்கள் பின் வரும் விஷயன்களை கண்டறிந்தோம்.
பெற்றோர்கள் மனதில் உள்ள பயத்தை பயன்படுத்தி ஒரு உண்மை நிலவரத்தை பற்றி அவதூறான தகவல்களை பரப்பி வாட்ஸ்அப் தகவல்கள் விளையாடுகின்றன.
அப்படியானால் எது உண்மை? மற்றும் அது பொய்?
உண்மை:
- சமீபத்தில், சனிக்கிழமை நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் கைது செய்யப்பட்ட போதிலும், காசியாபாத்தை தளமாக கொண்டு மருந்து தயாரிக்கும் நிறுவனம் தயார் செய்த ஓரல் போலியோ வேக்சின் அடுக்குகள் சிலவற்றில் போலியோ டைப் 2 வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக சுகாதார அமைச்சரகம் ஒரு ஒரு ஆய்வை நடத்த கட்டளையிட்டுள்ளது.
- பலன்களை விட அதிக ஆபத்துகளை கொண்டிருப்பதாக உலகம் முழுவதுமாக 2016ல் தடை செய்யப்பட்ட டைப் 2 போலியோ வைரஸ் இருக்கும் ஒரு ஒபிவியை ஒரு நிறுவனம் வெளியிட்டது என்பாத்து தொடர்பான புலன் விசாரணைக்கு இடையே அனைத்து உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் இருக்கும் ஓரல் போலியோ வேக்ஸின் மாதிரிகளை ஆராய வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்தியா உட்பட உலகம் முழுவதுமாக உள்ள நாடுகளிலிருந்து போலியோ டைப் 2 வைரஸ் ஸ்ட்ரெயின் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது.
- ஒரு குறிப்பிட்ட நிறுவனம் விநியோகித்த இரட்டிப்பு சக்தி கொண்ட ஓரல் போலியோ வேக்ஸின் மருந்து “ நிலையான தரம்” இல்லாமல் இருந்தது பற்றி ஊடக துறையில் உள்ள சில பிரிவிகள் அறிவித்ததும், போலியோ சொட்டுக்களில் ஒரு வகையான வைரஸ் இருப்பதாக வதந்திகள் பரப்பபட்டுள்ளன என்று சுகாதார துறை மந்திரி சபை தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளது.
- இந்த விஷயம் தொடர்பாக மத்திய மருந்து சீரமைப்பாளர் தனது முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின் தனியார் சில்லறை விற்பனையாளருக்கு அல்லாமல் அரசாங்கம் நடத்தும் நோய் தடுப்பு திட்டங்களுக்காக மட்டுமே போலியோ ஊசிகளை விநியோகிக்கும் பையோமெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் கைது செய்யப்பட்டார்.
- மேற்கொண்டு உத்தரவு வரும் வரை இந்த மருந்தை“தயாரிப்பதை,விற்பதை அல்லது விநியோகிப்பதை” நிறுத்தி வைக்கவும் இந்த நிறுவனத்தை இந்திய மருந்து சீரமைப்பு துறை ஜெனரல் கேட்டு கொண்டுள்ளார். குறைந்தது 50,000 குப்பிகள் ஆராயப்பட உள்ளன.
- இந்த போலியோ நோய் தடுப்பு மருந்து குப்பிகள் விசேஷ பாதுகாப்பு அம்சத்துடன் வருகின்றன. இந்த தடுப்பு மருந்தின் குப்பிகளின் மேல் பாகம் வழக்கமாக ஒரு வித்தியாசமான நிறத்தில் இருக்கும் மற்றும் அவை கெட்டு போனால், இந்த குப்பியின் நிறம் மாறி விடும்.
- தற்போது, பையோமெட் நிறுவனத்தை தவிர வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் ஓபிவிகள் சாதாரண சில்லறை நிறுவனங்களிலிருந்து வாங்கப்படுகின்றன மற்றும் பயன்படுத்துவதற்கும் அவை பாதுகாப்பாக உள்ளன.
- மேலும், பிஓபிவி குப்பிகளில் காணப்பட்ட டைப் 2 போலியோ வைரஸ் சுவடுகள் பலவீனப்பட்ட போலியோ வைரஸ் என்றும் மற்றும் அவைகள் முடக்கு வாதத்திற்கு காரணமானவைகள் இல்லை என்றும் மற்றும் முன்னதாக இவை ஏப்ரல் 2016 வரை டிஓபிவியில் பயன்படுத்தப்பட்டன என்றும் சுகாதார துறை மந்திரி இலாகா தெரிவித்தது. இது போன்ற தடுப்பு மருந்தை போட்டு கொள்பவர்கள் இந்த தடுப்பு மருந்தின் வைரசை மலத்தின் வழியாக வெளியேற்றி விடுவார்கள் மற்றும் 4 – 6 வாரங்களில் இது அழிந்து விடுகிறது.
அதனால், இந்திய அரசானகத்தின் கூற்று படி, ஓபிவி செலுத்தப்படுவதற்கு மிகவும் பாதுகாப்பானதாகும்.
பொய்:
அனைத்து போலியோ சொத்துக்களும் (ஓபிவி) கலப்படமானவை
அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு ஓபிவி கொடுப்பதை நிறுத்த வேண்டும் அதுவும் முக்கியமாக ஐந்து வயதுகளுக்கு குறைவான குழந்தைகளுக்கு.
சுகாதார துறை அமைச்சகத்தின் அலுவலர் பகிர்ந்துள்ள ட்வீட்டுகளை எங்களது வாசகர்கள் இதில் பார்க்கலாம்:
சுகாதார துறை அமைச்சகத்தின் ட்வீட்
சித்திரத்தை டிவிட்டரில் பார்க்கவும்
#போலியோ ஊசி மருந்துகள் பாதுகாப்பாகவும் திறனுடைவைகளாகவும் உள்ளன
38 பேர் இது பற்றி பேசுகிறார்கள்
# போலியோ மருந்து ஊசிகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானவை மற்றும் அவசியமானவை. பல ஆண்டுகளாக போலியோவினால் ஏற்படும் உடல் தளர்வுகளிடமிருந்து பல லட்சக்கணக்கான குழந்தைகளை தடுப்பு ஊசி மருந்துகள் காப்பாற்றியுள்ளன. போலியோவிற்கு எதிராக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.#ஸ்டே போலியோ ஃப்ரீ #ஸ்வஸ்தா பாரத்
இந்திய அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் நகலை டிவிட்டர் உபயோகிப்பாளர் டாக்டர்,ஜலம் எஸ் ராத்தோர் அவர்கள் ட்வீட் செய்துள்ளார்
சித்திரத்தை டிவிட்டரில் பார்க்கவும்
டாக்டர் ஜலம் எஸ் ராத்தோர்@drjsrathore
போலியோ தடுப்பூசி மருந்து பாதுகாப்பானது அல்ல என்று சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வரும் வதந்திக்கு எதிராக இந்த குறிப்பை பகிர்ந்து கொள்கிறேன். இந்த வதந்தியை எதிர்த்து இந்த ட்வீட்டை பரவலாக அனைத்து பொது மக்களுக்கு பரப்ப வேண்டி கொள்கிறேன். #போலியோ
பத்திரிகை தகவல் துறையின் (GOI) அசல் அறிக்கையை எங்களது வாசகர்கள் இங்கே படிக்கலாம்:
பலவித அம்சங்கள் குறித்தான புரிதலுக்கும் இது தொடர்பான ஒரு விசாலமான பார்வைக்கும் எங்களது வாசகர்கள் கீழே உள்ள இணைப்புகளில் உள்ள உரைநடைகளை படித்து அவர்களாகவே சுயமாக இந்த கதையின் அடித்தளத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
சில இணைப்புகள்
டைம்ஸ் ஆஃப் இந்தியா
மாசு படிந்த போலியோ தடுப்பூசி மருந்தின் குப்பிகளை உத்திதா பிரதேசம் நினைவு கூறுகிறது, தயாரிப்பாளரின் மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
காசியாபாத் மருந்து தயாரிப்பு நிறுவனம் விநியோகித்த வாய் வழியாக உட்கொள்ளப்படும் நோய் தடுப்பு மருந்தில் பாசு மடிந்த போலியோ சொட்டுக்கள் காணப்பட்டன, ஒருவர் கைது.
என்டிடிவி
ஃபைனான்ஷியல் எக்ஸ்ப்ரெஸ்
பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட்
தி ஹான்ஸ் இந்தியா
இறுதியாக:
ஆதாரமற்ற மற்றும் தவறான வாட்ஸ்அப் செய்திகளுக்கு இரையாகாமல் வாசகர்கள் ஒதுங்கி இருக்குமாறு ஃபாஸ்ட் க்ரெஸண்டோ அறிவுறுத்துகிறது. சந்தேகம் இருந்தால், உங்களுக்கு அருகாமையில் உள்ள சுகாதார மையத்திற்கு சென்று உங்களது குழந்தைக்கான மருத்துவரிடம் பேசவும்,ச்குஆதார துறை அமைச்சகத்தின் அலுவலின் வலைத்தளம் அல்லது ட்விட்டர் அக்கவுண்டில் சரி பார்க்கவும் அல்லது ஆன்லைனில் உள்ள பல்வேறு வலைத்தளங்களுக்கு சென்று சரி பார்க்கவும்.