FactCheck: சமூக இடைவெளியால் சத்துணவு முட்டை தர முடியாது என்று திமுக அரசு கூறவில்லை!
‘’சமூக இடைவெளியால் சத்துணவு முட்டை தர முடியாது என்று திமுக அரசு தகவல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் தகவல் பகிர்வதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இந்த ஸ்கிரின்ஷாட்டை, வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தனர்.
இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
இதில், நியூஸ் 7 மற்றும் ஜெயா பிளஸ் ஊடகங்கள் வெளியிட்ட நியூஸ் கார்டை ஒன்றாக இணைத்து பகிர்ந்துள்ளனர். அவற்றில், ‘’சத்துணவு முட்டைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்க உத்தரவிட கோரிய வழக்கில், சமூக இடைவெளி பிரச்னையால் முட்டை வழங்க முடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்!,’’ என்றும், ‘’மாணவர்களுக்கு முட்டை வழங்குவதற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியவில்லை என்றால் டாஸ்மாக் கடைகளை மட்டும் எப்படி திறக்கிறீர்கள் – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி,’’ என்றும் எழுதப்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டுகளில், உள்ள தேதியை ஒருமுறை நன்கு உற்று கவனித்தபோது, அவை 2020 தேதியிட்டவை என்று தெரியவந்தது. மேலும், ஒரு நியூஸ் கார்டில், லாக் டவுன் 132வது நாள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது 2020ம் ஆண்டில் முதல் சுற்று கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது வெளியான செய்தி என தெளிவாகிறது.
இதன்படி, குறிப்பிட்ட செய்தி 2020ல் வெளியானது என்பதால், இவற்றுக்கும், தற்போதைய திமுக அரசுக்கும் தொடர்பில்லை எனவும் உறுதி செய்யப்படுகிறது. காரணம், திமுக ஆட்சிக்கு வந்தது கடந்த மே 2, 2021 தேர்தலுக்குப் பிறகுதான். அதற்கு முன்பு வரையிலும் அதிமுக ஆட்சியில் இருந்தது.
இந்த சத்துணவு முட்டை விவகாரம் தொடர்பான விசாரணையும் அதிமுக ஆட்சியில்தான் நடைபெற்றது.
மேற்குறிப்பிட்ட நியூஸ் 7 தமிழ் செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மற்ற ஊடகங்களில் 2020ல் வெளியான இதே செய்தி லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
Dinakaran Link I Kalaignar Seithigal Link I Puthiyathalaimurai Link
எனவே, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான செய்தியை எடுத்து, தற்போதைய செய்தி போல பகிர்கிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel
Title:சமூக இடைவெளியால் சத்துணவு முட்டை தர முடியாது என்று திமுக அரசு கூறவில்லை!
Fact Check By: Pankaj IyerResult: Missing Context