அமெரிக்கா சென்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயரில் அவருடைய புகைப்படத்தை வௌியிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I x.com I Archive

நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் மு.க.ஸ்டாலினை வரவேற்று அவரது புகைப்படத்துடன் தகவல் வெளியிடப்பட்டதாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த நியூஸ் கார்டில், "அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நியூயார்க்கில் உள்ள Times Square-ல் கொடுக்கப்பட்ட வரவேற்பு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்டாலினுக்கு டைம்ஸ் ஸ்கொயரில் வரவேற்பு அளிக்கப்பட்டது என்று புகைப்படத்தையும் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தமிழர்கள் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் அவரை வரவேற்கும் வகையில் தகவல் வெளியானது போன்று புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். புதிய தலைமுறையும் அப்படி ஒரு நியூஸ் கார்டை வெளியிட்டிருந்தது. இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

முதலில் இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிப் பார்த்தோம். அப்போது நியூயார்க் Times Square Extraordinaire என்ற பெயரில் இருந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் நமக்குக் கிடைத்தது. ஆனால், அதில் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இல்லை. இந்த புகைப்படத்தை எடுத்து மு.க.ஸ்டாலினை வரவேற்பது போன்ற படத்தை வைத்து எடிட் செய்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

டைம்ஸ் ஸ்கொயரில் இலவசமாக வரவேற்பு உள்ளிட்டவை போடப்படுவது இல்லை. அங்கு யார் வேண்டுமானாலும் விளம்பரம் செய்யலாம். விளம்பரம் செய்வது தொடர்பாக டைம்ஸ் ஸ்கொயர் ஃபேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.

அடுத்ததாக புதிய தலைமுறை வெளியிட்டிருந்த பதிவு சிறிது நேரத்தில் அகற்றப்பட்டிருந்தது. எனவே, இது தொடர்பான விவரத்தை அறிய புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் பேசினோம். நம்மிடம் அவர், "இந்த புகைப்படம் தவறானது என்று எங்களுக்குத் தெரியவந்தது. அதனால் அதை அகற்றிவிட்டோம்" என்றார். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு தவறானது என்பது உறுதியாகிறது.

நம்முடைய ஆய்வில் டைம்ஸ் ஸ்கொயர் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து உண்மையான புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை எடிட் செய்து ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தவறானது என்று தெரிந்ததால் அதை அகற்றிவிட்டோம் என்று புதிய தலைமுறை தரப்பில் நம்மிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் டைம்ஸ் ஸ்கொயரில் ஸ்டாலினை வரவேற்று காணொலி வௌியானது என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்றும், நியூஸ் கார்டு தவறானது என்றும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டைம்ஸ் ஸ்கொயரில் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:டைம்ஸ் ஸ்கொயரில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False