கேமிரா மூடியைக் கழற்றாமல் புகைப்படம் எடுத்தாரா மோடி?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

கேமரா மூடியைக் கூட கழற்றாமல் மோடி புகைப்படம் எடுத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி புகைப்படம் எடுப்பது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. கேமராவின் மூடி கழற்றப்படாமல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருக்கும் ஒருவன் கேமரா இல்லாமலும் போட்டோ எடுப்பான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Maraimalainagar மறைமலைநகர் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 செப்டம்பர் 18ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடி கேமரா மூடியைக் கூட கழற்றாமல் புகைப்படம் எடுப்பது போன்று போஸ் கொடுப்பதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். புகைப்படம் உண்மையானது போல தெரியவில்லை. கேமரா மூடி போட்டோஷாப் மூலம் வைக்கப்பட்டது போல உள்ளது.

மேலும், படத்தை சற்று பெரிதாக்கிப் பார்த்த போது, படத்தை மிரர் இமேஜ் போல பகிர்ந்திருப்பது தெரிந்தது. கேமராவின் பெயர் நிக்கான் (Nikon) என மிரர் இமேஜில் தெரிகிறது. ஆனால், கேமராவின் மூடியில் சரியாக “Canon” என இருந்தது. எனவே, இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது. இதை உறுதி செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டோம்.

மோடி புகைப்படம் எடுக்கும் சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளைப் பிரதமர் மோடி தன்னுடைய பிறந்த நாள் அன்று காட்டில் திறந்துவிட்ட போது எடுக்கப்பட்டதாகும். எனவே, அன்றைய தேதியில் வெளியான புகைப்படங்கள், காணொளிகளைத் தேடி எடுத்தோம்.

உண்மைப் பதிவைக் காண: pmindia.gov.in I Archive 1 I newindianexpress.com I Archive 2

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகைப்பட பிரிவில் சிறுத்தைகள் திறந்துவிடப்பட்ட நிகழ்வின் புகைப்படங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்த போது, பிரதமர் மோடி புகைப்படம் எடுக்கும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படம் கிடைத்தது. அதில், கேமரா மூடி இல்லை. நிக்கான் கேமராவில் அவர் புகைப்படங்கள் எடுப்பது தெளிவாகத் தெரிந்தது.

மேலும், மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் பிரதமர் மோடி, சிறுத்தைகளைப் புகைப்படம் எடுக்கும் காட்சி இருந்தது. அதிலும் கூட கேமரா மூடி இல்லை. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரதமர் மோடி கேமரா மூடியைக் கூட கழற்றாமல் புகைப்படம் எடுப்பது போல் போஸ் கொடுத்தார் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கேமிரா மூடியைக் கழற்றாமல் புகைப்படம் எடுத்தாரா மோடி?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

Leave a Reply