‘’ராகுல் காந்தியை நேருக்கு நேர் கேள்வி கேட்ட அனுராக் தாக்கூர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ ஒரே ஒரு கேள்வி, பதில் சொல்ல முடியாமல் திணறிய ராகுல் காந்தி’’, என்று எழுதப்பட்டுள்ளது.

‘இந்திய அரசியல் சாசனத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளன?’, என்று அனுராக் தாக்கூர் கேட்பது போன்றும், அதற்கு பதில் தெரியாமல் ராகுல் காந்தி திணறுவது போன்றும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

Claim Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Tweet Link l Archived Link

உண்மை அறிவோம்:

இந்த தகவல் உண்மையா என்று நாம் கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது நமக்கு நாடாளுமன்ற விவாதங்களை நேரடி ஒளிபரப்பு செய்யும் Sansad TV (Lok Sabha- YouTube channel) கடந்த ஜூலை 1ம் தேதி வெளியிட்ட வீடியோ ஆதாரம் கிடைத்தது.

இதில் அனுராக் தாக்கூர் மட்டுமே பேசுகிறார். ராகுல் காந்தி சில நொடிகளுக்கு மேல் எதுவும் பெரிதாகப் பேசவில்லை. அத்துடன், இந்த வீடியோவின் 56:36 நிமிடத்தில் அனுராக் தாக்கூர் எதிர்க்கட்சி உறுப்பனர்களை பார்த்து, ‘’இந்திய அரசியல் சாசனத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளன?’’, என்று கேட்கிறார். ஆனால், அந்த நேரத்தில் ராகுல் காந்தி அவையில் இல்லை. மேலும், சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லாவுக்குப் பதிலாக, திலிப் சாகியா அமர்ந்துள்ளார்.

இதேபோன்று, ராகுல் காந்தி நீண்ட நேரம் பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் நமக்குக் கிடைத்தது. அந்த வீடியோவில் அனுராக் எதுவும் ராகுலை எதிர்த்து நேரடியாகப் பேசவில்லை. அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்றோர்தான் பேசுகிறார்கள். ராகுல் காந்தி அமைதியாக யோசித்தபடி நிற்பது போன்ற சில காட்சிகளையும் இந்த வீடியோவில்தான் காண முடிகிறது.

எனவே, அனுராக் தாக்கூர் கேள்வி கேட்பதற்கும், ராகுல் காந்தி பதில் கூறாமல், யோசிப்பது போன்று நிற்கும் காட்சிக்கும், எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவருகிறது. அனுராக் தாக்கூர் பேச ஆரம்பிக்கும்போது, அவையில் இருந்த ராகுல் காந்தி, பின்னர் வெளியேறி விட்டார்.

இந்த உண்மையை மறக்கும் விதமாக, சிலர் வேண்டுமென்றே அனுராக் தாக்கூர் நேருக்கு நேர் ராகுல் காந்தியை கேள்வி கேட்டு, திணறடித்தார் என்று வதந்தி பரப்புகிறார்கள் என்று, தெரியவருகிறது.

இதுதொடர்பாக, நமது மலையாளம் மொழிப் பிரிவினர் வெளியிட்ட ஃபேக்ட்செக் கீழே இணைக்கப்பட்டுளளது.

Fact Crescendo Malayalam Link

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘ராகுல் காந்தியை நேருக்கு நேர் கேள்வி கேட்ட அனுராக் தாக்கூர்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: ALTERED