
வாக்கு கேட்டு சென்ற இடத்தில் கனிமொழியை மக்கள் விரட்டியடித்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கனிமொழியை மக்கள் மறித்துப் பேசும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. கனிமொழியை விரட்டியடித்தது போன்று வீடியோவில் காட்சியோ, உரையாடலோ இல்லை. “பேசினா போதும் அக்கா” என்று மட்டும் கேட்கிறது. நிலைத் தகவலில். “விரட்டியடிக்கப்பட்ட கனிமொழி 🔥
ஓட்டு கேட்டு போகும் எல்லா இடங்களிலும் திமுகவினரை மக்கள் விரட்டி அடிக்கின்றனர் 2026 மாற்றம் நிச்சயம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பிலிருந்தும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தி.மு.க-வினரை விரட்டி அடிக்கும் மக்கள், கனிமொழியை விரட்டினர் என்றெல்லாம் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்தது நினைவிலிருந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2024ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி இந்த வீடியோவை சன் நியூஸ் வெளியிட்டிருந்தது. “அக்கா நீங்க பேசுனா போதும்க்கா-Kanimozhiயின் வாகனத்தை மறித்து அன்பாக கதவுகொண்ட தூத்துக்குடி மக்கள்” என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த வீடியோவை பார்த்தோம். கிராம மக்கள் தங்கள் ஊரில் பேசும்படி, வாகனத்தில் இருந்தபடியே பேசும்படி அன்புக் கோரிக்கை விடுத்ததைக் காண முடிந்தது. 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அப்போது இந்த நிகழ்வு நடந்தது என்று செய்திகள் நமக்கு கிடைத்தன.
இதன் மூலம் வாக்கு சேகரிக்கச் சென்ற கனிமொழி மற்றும் தி.மு.க-வினரை மக்கள் விரட்டியடித்தனர் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வாக்கு சேகரிக்கச் சென்ற கனிமொழியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram


