ஊழல் மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

ஊழல் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், அதிலும் குறிப்பாக காவல் துறையில் அதிக ஊழல் நடப்பதாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

வெக்கபட. வேன்டீயது யாரு அவங்களுக்கு கொஞ்சம் கூட கிடையாது. உங்களுக்கு

Archived link

விகடன் டி.வி லோகோவுடன் “தமிழ்நாடு ஊழல் நம்பர் 1” என்ற நியூஸ்கார்டு உள்ளது. அதன் மேல் பகுதியில், “ஊழல் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்து சாதனை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடான கோடி நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளனர். நியூஸ் கார்டின் கீழ் பகுதியில், “ஊழல் மிகுந்த துறைகளில் முதல் இடம் தமிழ்நாடு போக்குவரத்து துறை, இரண்டாவது இடம் தமிழ்நாடு காவல் துறை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை குடந்தை முருகன் என்பவர் 2019 ஜூன் 10ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியாவின் ஊழல் மிகுந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விகடன் டி.வி லோகோவுடன் இந்த தகவல் உள்ளதால், ஆனந்த விகடன் இணையதளத்தில் இது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம்.

Tamil Nadu 2.png

அப்போது, “`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ – தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?” என்ற தலைப்பிலான 2018ம் ஆண்டு மே 20ம் தேதி வெளியான ஒரு செய்தி கிடைத்தது. சி.எம்.எஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டிருந்தது. உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பீகார் என வெறும் 13 மாநிலங்களில் மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது.

இது குறித்து சிஎம்எஸ்-இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அலோக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசு வழங்கும் சேவைகளை பொது மக்கள் பெறுவதில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 13 மாநிலங்களில் ஆய்வு நடத்தி, அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. ஊழல் பட்டியலில், மற்ற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி ஊழல் நிறைந்த மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது. ஆதார் அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்வது, ஆதார் அட்டை பெறுவது, வாக்காளர் அட்டைப் பெறுவது பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பொதுமக்களுக்கான அரசு சேவைகளை வழங்க அதிகளவில் லஞ்சம் பெறும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது” என்று கூறப்பட்டு இருந்தது.

Tamil Nadu 3.png

இந்த செய்தியில் எந்த இடத்திலும் தமிழகத்தில் அதிக ஊழல் நடைபெறும் துறையாக தமிழக காவல் துறை உள்ளது என்று குறிப்பிடவில்லை.

விகடன் டி.வி பெயரில் நியூஸ்கார்டு உள்ளது. உண்மையில் இந்த நியூஸ்கார்டை விகடன்தான் வெளியிட்டதா என்று ஆய்வு செய்தோம். இதற்காக விகடன் டி.வி யூடியூப் சேனல் சென்று தேடினோம். அப்போது, மேற்கண்ட விகடன் செய்தி வெளியானதற்கு அடுத்தநாள் (2018 மே 21ம் தேதி) பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு வீடியோ கிடைத்தது.

Tamil Nadu 4.png

அதில், இரண்டு பேர் அன்றாட நிகழ்வுகள் பற்றி பேசுகின்றனர். அப்போது, ஊழலில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துவிட்டது என்று பேசுகின்றனர். அப்போது பின்னணியில் மேற்கண்ட நியூஸ்கார்டு காட்டப்படுகிறது. வீடியோவில் 1.54வது நிமிடத்தில் அந்த நியூஸ்கார்டை காணலாம்.

உண்மையில் இந்தியாவில் தமிழகம்தான் ஊழல் மாநிலமா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, உலக அளவில் ஊழல் மலிந்த, ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் டிரான்ஸ்ஃபரன்ஸி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு இந்தியாவில் ஊழல் மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டு வரும் தகவல் கிடைத்தது.

2018ம் ஆண்டுக்கான அறிக்கை 2018 அக்டோபரில் வெளியானது. அதில் கூட 15 மாநிலங்களில் மட்டும்தான் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் முதல் இடம் உத்தரப்பிரதேசத்துக்கும் இரண்டாவது இடம் பஞ்சாபுக்கும் மூன்றாவது இடம் தமிழகத்துக்கும் வழங்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் பதிவுத் துறையில்தான் அதிக ஊழல் நடப்பதாக அது தெரிவித்திருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில்,

விகடன்.காமில் ஊழலில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்தது என்ற செய்தி வெளியானது கிடைத்துள்ளது.

ஆனால், அந்த செய்தியில் காவல் துறையில்தான் அதிகம் ஊழல் நடக்கிறது என்று கூறவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட டிரான்ஸ்ஃபரன்ஸி இன்டர்நேஷனல் வெளியிட்ட கடைசி ஆய்வின்படி ஊழல் மலிந்த மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. தமிழகத்துக்கு 3வது இடம்தான் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஊழல் மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •