
‘’இந்திய அரசியல், ஊடக நிலை பற்றி பென் காரிசன் வரைந்த கார்ட்டூன்,’’ என்ற தலைப்பில் வித விதமாக பரவி வரும் கார்ட்டூன்கள் பற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link
காங்கிரஸ் கட்சி பற்றி பென் காரிசன் வரைந்ததாகச் சிலர் பகிர்ந்து வருவது போல, பாஜக பற்றி பென் காரிசன் வரைந்ததாகக் கூறி இவர்களுக்கு எதிர் கருத்து உள்ளவர்களும் ஒரு கார்ட்டூனை பகிர்ந்து வருகிறார்கள். அதன் விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Facebook Link I Archived Link
இதுதவிர, இந்திய ஊடக நிலை பற்றி பென் காரிசன் விமர்சித்துள்ளதாகவும், ஒரு கார்ட்டூன் பகிரப்பட்டு வருகிறது. இதன் விவரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இப்படியாக, மாறி மாறி பலரும் கடந்த சில ஆண்டுகளாக, பென் காரிசன் பெயரில் கார்ட்டூன் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து அரசியல் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடும் கார்ட்டூன்கள் அனைத்துமே போலியானவை. இப்படியாக, கடந்த 2015ம் ஆண்டு முதலாக, மாறி மாறி கார்ட்டூன்கள் பகிரப்பட்டு வருவதை தொடர்ந்து, பென் காரிசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இவை பற்றி மறுப்பு தெரிவித்து, பதிவு ஒன்றை 2017ம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறார்.
இதுபற்றி AFP Fact Check இணையதளம் கூட உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், இவை அனைத்தும் போலியானவை என்பது பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ‘பென் காரிசன் பெயரை பயன்படுத்தி, சில தனிப்பட்ட நபர்கள் போலியான கார்ட்டூன்களை சித்தரித்து பகிர்ந்து வருகிறார்கள்; அதனை பலரும் உண்மை என நம்புகிறார்கள்,’ என்பது தெளிவாகிறது.
மேலும், இதனை உண்மையாக வரைந்தவர் Amal Medhi என்பவர் ஆவார். ஆனால், அவர் வரைந்த கார்ட்டூன் உண்மையில் வேறு ஒன்றாகும். அதனை ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.

Facebook Link I Archived Link
இதன்படி, மேற்கண்ட கார்ட்டூனை அடிப்படையாக வைத்து, காங்கிரஸ், பாஜக ஆதரவாளர்கள் தங்கள் விருப்பம்போல, போலி கார்ட்டூனை தயாரித்து, அதனை பென் காரிசன் பெயரில் பகிர்ந்திருக்கிறார்கள் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவுகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்திய அரசியல், ஊடக நிலை பற்றி பென் காரிசன் கார்ட்டூன் வரைந்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
