மோடி அத்வானியை கிண்டல் செய்து பஜனை பாடல் பாடப்பட்டதா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

மோடி, அத்வானி உள்ளிட்டவர்களை கிண்டல் செய்து மலையாளத்தில் பஜனைப் பாடல் ஒன்று பாடப்படுவதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

3 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மோடி, அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க-வினை திட்டும், கிண்டல் செய்யும் வகையில் பஜனைப் பாடல் பாடப்படுகிறது. 

நிலைத் தகவலில், “தரமான பாடல். அத்வானிக்கு வரதட்சணையாக கிடைத்தது அல்ல இந்தியா. மோடியுடன் அம்மாவுடைய சொத்தல்ல இந்தியா” என்று பாடலின் இரண்டு வரியைக் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ பதிவை Kalaikalamvaga Kalaikalamvaga என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2019 டிசம்பர் 17ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கேரளாவில் பா.ஜ.க எதிர்ப்பு அதிகமாக இருந்தாலும், கோவிலுக்குள் பா.ஜ.க-வை விமர்சித்துப் பாடுகிறார்கள் என்ற பதிவு ஆச்சரியத்தை அளித்தது. வீடியோவைப் பார்த்தோம்… ஆடியோவும் (ஒலி) வீடியோவும் (காட்சி) ஒத்துப்போகவில்லை. வாயசைப்புக்கள் வித்தியாசமாக இருந்தது. எனவே, உண்மையான வீடியோவைக் கண்டறிய வீடியோவின் காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

Search Link 1Search Link 2

அப்போது இந்த குழுவினரின் வீடியோ காட்சிகள் நமக்கு கிடைத்தன. முருகன், விநாயகர், ஐயப்பன், குருவாயூரப்பன் என்று பல தெய்வங்களைப் புகழ்ந்து இதே இடத்தில் இவர்கள் பாடிய பல வீடியோக்கள் யூடியூபில் அப்லோட் செய்யப்பட்டு இருந்தது. இதில், மிகச்சரியான வீடியோவை தேடுவது சவாலாகவே இருந்து. சில மணி நேரம் செலவழித்து ஒவ்வொரு வீடியோவாகப் பார்த்து, இரண்டின் வாயசைப்பு, காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தோம். கடைசியில் நமக்கு அசல் வீடியோ கிடைத்தது. 

Archived Link

2015ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த கோவிந்த நாம சங்கீர்த்தனம் என்ற பஜனைப் பாடலில் முதல் மூன்று நிமிட காட்சிகள் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோவோடு ஒத்துப்போனது. இதன் மூலம் கோவிந்த நாம சங்கீர்த்தனம் என்ற வீடியோவை எடுத்து, ஆடியோவை மட்டும் மாற்றி வெளியிட்டிருப்பது உறுதியானது.

நம்முடைய ஆய்வில், 

பஜனை பாடலின் அசல் வீடியோ கிடைத்துள்ளது. அதில், மோடியை, அத்வானியை விமர்சித்து எதுவும் பாடப்படவில்லை. முழுக்க முழுக்க பக்தி பாடலாகவே அது இருந்தது. அந்த வீடியோவின் ஆடியோவை எடிட் செய்து, மோடியை விமர்சிக்கும் பாடலை சேர்த்து எடிட் செய்து வெளியிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த ஃபேஸ்புக் வீடியோ போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மோடி அத்வானியை கிண்டல் செய்து பஜனை பாடல் பாடப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False